Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிகே மணி மகனை வறுத்தெடுத்தும் பாமகவினர்! தமிழ் குமரனால் தர்ம சங்கடம்! ரஜினி படத்துக்கு வந்த சோதனை!

மகன் தமிழ் குமரனால் கட்சியில் ஜிகே மணிக்கு வந்த சோதனை.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை வன்னியர் அமைப்பினரும், சொந்தக் கட்சியினரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

''வன்னியர் விரோதியுடன் ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் கைகோர்த்து செயல்படுவதாக'' சமூக வலைதளங்களில் கோபத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதனால் கட்சியிலும், சொந்த சமுதாயத்தினர் மத்தியிலும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணிக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது.

பாமக கவுரவத் தலைவர்

பாமக கவுரவத் தலைவர்

பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜிகே மணியின் மகன் தமிழ்குமரன் லைகா புரோடெக்‌ஷன்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர் அண்மையில் பாமக இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அந்தப் பதவியை வேண்டாம் எனக் கூறி ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க தனது தொழிலை கவனிக்கச் சென்றுவிட்டார்.

ஜெய்பீம் இயக்குநர்

ஜெய்பீம் இயக்குநர்

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170 வது படத்தை லைகா புரோடெக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் லைகா புரொடெக்‌ஷன்ஸ் சி.இ.ஓ.வும் ஜிகே மணியின் மகனுமான தமிழ் குமரன் மீது வன்னியர் அமைப்புகளும், பட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளும் கோபம் அடைந்தனர். ஞானவேலை வைத்து எப்படி தமிழ் குமரன் படம் எடுக்கலாம் என்றும் வன்னியர் விரோதியுடன் இவர் எப்படி கை கோர்க்கலாம் எனவும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

ஜிகே மணிக்கு தர்மசங்கடம்

ஜிகே மணிக்கு தர்மசங்கடம்

தனது மகன் தமிழ் குமரனால் ஜிகே மணிக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் அவர் தவித்து வருகிறார். ரஜினியின் 170 வது படத்தை ஞானவேல் இயக்கினால் அந்த திரைப்படத்தை வன்னியர்கள் புறக்கணிக்க வேண்டும் ஞானவேல் மீண்டும் எந்தப் படத்தையும் இயக்கக் கூடாது என பாமக சேர்ந்தவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இளைஞரணித் தலைவர்

இளைஞரணித் தலைவர்

பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்காக பலரும் முட்டி மோதி வரும் நிலையில், ஜிகே மணியின் மகன் தமிழ்குமரனுக்கு அந்தப் பதவியை வழங்கியிருந்தார் ராமதாஸ். ஆனால் தமிழ் குமரனோ ராமதாஸ் கொடுத்த பதவியை ராஜினாமா செய்ததோடு அரசியலுக்கும் முழுக்குப் போட்டுவிட்டு சினிமா தொழிலை கவனிக்க சென்றூவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+