Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதாரண பஸ் கன்டக்டர்.. உயர்ந்த மனிதர்களுடன் ஒரே மேடையில்.. அதிசயம்தான்.. ரஜினியின் 2013 பேச்சு வைரல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சாதாரண பஸ் கன்டக்டர்.

    சென்னை: 2013-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா ஒன்றில் தன் வாழ்வின் அதிசயம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-இல் அறிவித்த விஷயங்களைவிட கடந்த வாரம் நடந்த இயக்குநர் கே பாலசந்தரின் சிலைத் திறப்பு விழாவிலும், நேற்று முன் தினம் கமல்ஹாசன் நிகழ்ச்சியிலும் அவர் பேசிய பேச்சுக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    நடிகர் கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் வகையில் உங்கள் நான் என்ற நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

    அதிசயம்

    அதிசயம்

    அவர் பேசுகையில் எடப்பாடி முதல்வராவார் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால் அதிசயம் நடந்தது. தமிழக அரசு இப்போது கவிழ்ந்து விடும் , அப்போது கவிழ்ந்துவிடும் என்றார்கள். அதுவும் 99 சதவீதம் பேர் இதைத்தான் சொன்னார்கள். ஆனால் அதிசயம் அற்புதம் நடந்தது.

    விவாதங்கள்

    விவாதங்கள்

    தடைகளை தாண்டி இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. அது போல் அதிசயம் இன்றும் நடக்கிறது. நாளையும் நடக்கும் என்றார். இதையடுத்து ரஜினிகாந்த் கூறிய அதிசயம் என்ன என்பது குறித்த டிவியில் விவாதங்கள் நடைபெற்றன.

    நம்பிக்கை இல்லை

    நம்பிக்கை இல்லை

    இந்த நிலையில் ரஜினி ஏற்கெனவே கடந்த 2013-ஆம் ஆண்டு இது போல் அதிசயம் குறித்து பேசிய வீடியோ வைரலாகிறது. ஒரு விருது வழங்கும் விழாவில் பேசிய ரஜினி, பலருக்கும் அதிசயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிசயங்கள் நடக்கும்.

    விமர்சனம்

    விமர்சனம்

    ஒரு சாதாரண பஸ் கன்டக்டரான நான், இத்தனை உயர்ந்த மனிதர்களோடு ஒரே மேடையில் இருப்பதே அதிசயம்தான் என தெரிவித்திருந்தார். இதனிடையே பேருந்து நடத்துநராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினியும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஆவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என நமது அம்மாவில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+