மயில்சாமி வீட்டு மீன் குழம்பு.. சாலிகிராமம் டூ போயஸ் தோட்டம் டூ ஆழ்வார்பேட்டை வரை பயணிக்குமாம்!

மயில்சாமி வீட்டு மீன் குழம்பு என்றால் ரஜினிகாந்திற்கும் கமல்ஹாசனுக்கும் அத்தனை பிரியமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மயில்சாமி வீட்டில் அவரது மனைவி வைக்கும் மீன் குழம்பு ரஜினிகாந்திற்கும் கமல்ஹாசனுக்கும் மிகவும் பிடிக்குமாம். இதனால் தனது வீட்டில் மீன் குழம்பு வைக்கும் போதெல்லாம் இருவருக்கும் மயில்சாமி கொண்டு செல்வாராம்.

மயில்சாமி இறந்து சரியாக இன்று 8ஆவது நாளாகும். கடந்த வாரம் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்ற மயில்சாமி அதிகாலை வீடு திரும்பியவுடன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மறுநாள் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் மயில்சாமி குறித்த பழைய விஷயங்கள் தற்போது மீண்டும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்திற்கும் கமல்ஹாசனுக்கும் மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் பலமுறை மயில்சாமி வீட்டில் மீன் குழம்பை தயார் செய்து கொண்டு அவர்களின் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுப்பாராம். ஒரு முறை கமல்ஹாசன் திடீரென மயில்சாமிக்கு போன் செய்து மயிலு எனக்கு இன்று மீன் குழம்பு வேண்டும் என கூறி போன் இணைப்பை துண்டித்துவிட்டாராம்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

சரி என கமல்ஹாசன் சொன்ன விஷயத்தை தனது மனைவியிடம் சொன்ன போதுதான் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என தெரியவந்தது. இதை கமலிடம் எப்படி சொல்வது, ஆசைப்பட்டு கேட்டாரே என நினைத்த மயில்சாமி கமல்ஹாசனை ஏமாற்ற மனமில்லாமல் வீட்டிலிருந்து ஒரு பாத்திரத்துடன் ஒரு ஹோட்டலுக்கு சென்றாராம். அங்கு ஒரு மீன் குழம்பை தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் பார்சல் வாங்கிக் கொண்டு அதை எடுத்துகிட்டு நேராக கமல்ஹாசன் வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.

ஆசை ஆசையாக மீன் குழம்பு

ஆசை ஆசையாக மீன் குழம்பு

அப்போது ஆசை ஆசையாக மீன் குழம்பை கமல்ஹாசன் சாப்பிட்டாராம். உடனே மயில்சாமி நல்ல வேளை நம் வீட்டு மீன் குழம்பு இல்லை என்பதை கமல் கண்டுபிடிக்கவில்லை என மனதிற்குள் நிம்மதி பெருமூச்சுவிட்டாராம். அப்போது கமல்ஹாசன் மயிலு இந்த கடையின் மீன் குழம்பு ரொம்ப பிரமாதமாக இருக்கு என கமல் சொன்னதும் மயில்சாமி செய்வதறியாது திகைத்தாராம்.

அசைவ பிரியர்

அசைவ பிரியர்

ரஜினிகாந்த் ஆரம்பகட்டத்திலிருந்தே அசைவ பிரியர். அவருக்கு காலை தூங்கி எழுந்ததும் ஆப்பம் பாயாதானாம். சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்டவைகளை விரும்பி உண்பாராம். சில ஹோட்டல்களில் இவர் சென்றாலே அந்த ஹோட்டல்களின் சிக்னேச்சர் டிஸ்களில் ரஜினிக்கு பிடித்தமானவை பரிமாறப்படுமாம். அது போல் லீ மெரீடியனில் கூட சிக்கன் வகையறாக்களை விரும்பி சாப்பிடுவாராம். ரஜினிக்கு கருவாட்டுக் குழம்பு, மீன் குழம்பு, தலை கறி, குடல் கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

முத்தப்பா மேக்கப் ஆர்டிஸ்ட்

முத்தப்பா மேக்கப் ஆர்டிஸ்ட்

தனது மேக்கப் ஆர்டிஸ்ட் முத்தப்பா வீட்டிற்கு ரஜினி மாறுவேடத்தில் வருவாராம். அங்கு வந்து அவர் மனைவி வைக்கும் தலைக்கறி குழம்பு, ஆட்டுக் குடல் குழம்பு, மீன் குழம்பை விரும்பி சாப்பிடுவாராம். அவர் வருவதற்கு முன்பே என்ன வேண்டும் என கேட்டு ரஜினிக்கு முத்தப்பாவின் மனைவி சமைத்துவிடுவாராம். பிறகு ரஜினியும் முத்தப்பா சேர்ந்து சாப்பிடுவார்களாம். அது போல் நீலாங்கரையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான பங்களாவில் சிங்கப்பூரில் இருந்து வந்த போது ரஜினி அங்குதான் ஓய்வு எடுத்தார்.

பங்களா

பங்களா

அப்போது அவர் அந்த பங்களாவில் ஒரு குடிசை வீடு இருந்ததாம். அந்த வீட்டுக்காரரிடம் தான் சூப்பர் ஸ்டார் என்பதை மறந்து அவர்களிடம் ஜாலியாக பேசுவாராம். ஒரு முறை அவர்கள் வீட்டில் கருவாட்டு குழம்பு வைத்து அதை ரஜினிக்கு கொடுத்தார்களாம். அன்று முதல் அவர் அங்கு இருக்கும் வரை கருவாட்டு குழம்பை ருசித்து சாப்பிட்டாராம். இது போல் ரஜினி அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே அவருக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சாதாரணமாக தரையில் அமர்ந்து சாப்பிடுவாராம் ரஜினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+