சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவருக்காக" ஆள் திரட்டுகிறாராமே அழகிரி.. வலையில் யாரெல்லாம் வந்து விழ போறாங்களோ?!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி ஆரம்பிக்க போகும் புது கட்சியில், திமுகவின் அதிருப்தியாளர்களையும், சில சீனியர்களையும் இணைக்க முக அழகிரி காய் நகர்த்தி வருவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

பொதுவாக, ஒவ்வொரு முறை தேர்தல் நேரத்திலும் தவறாமல் முக அழகிரி முக்கியத்துவம் பெற்று விடுவார்.. அதேபோல, ரஜினி கட்சி தொடங்க போகிறார் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அழகிரி மறுபடியும் லைம் லைட்டுக்குள் வந்துபோவார்.

இப்போது சில காலமாகவே அழகிரியின் பெயர் விடாமல் சோஷியல் மீடியாவில் அடிபட்டு கொண்டிருக்கிறது. அமித்ஷா வந்து சென்ற பிறகும், ரஜினி அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிட்ட பிறகும், அழகிரி மீதான கவனம் அதிகரித்து வருகிறது.

மதிப்பு

மதிப்பு

முக அழகிரி மீது திமுகவின் சீனியர்கள் பலரும் எப்போதுமே அவர்மீது மதிப்பையும் பாசத்தையும் வைத்திருப்பவர்கள்.. அந்த வகையில் அழகிரி தனி கட்சி தொடங்கினால் அவருடன் இணைய பலர் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது.

 அழகிரி

அழகிரி

மேலும் ரஜினி கட்சி ஆரம்பித்தால், தமது ஆதரவாளர்களுடன் அந்த கட்சியில் அழகிரி இணைவார் என்றும் சொல்லப்பட்டது. இதற்காக கடந்த வருடமே மாவட்டந்தோறும் அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன. ஒவ்வொரு முறையும் அழகிரி சம்பந்தமான செய்திகள் வந்தால் பாஜக தரப்பு அதனை மறக்காமல் வரவேற்கவே செய்யும்.

 தீயசக்தி

தீயசக்தி

"தீயசக்தியான திமுகவை அழிக்கின்ற நல்ல முடிவினை கண்டிப்பாக அழகிரி எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று எச்.ராஜாவே ஒருமுறை சொல்லி இருந்தார். முக அழகிரிக்கு பாஜக ஒவ்வொரு முறையும் சப்போர்ட் செய்து வருவதை கண்ட நடுநிலையாளர்களோ, பீகார் போன்று தமிழகத்தில் முக அழகிரியை வைத்தே திமுகவை பாஜக காலி செய்ய பார்க்கிறது என்றும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இதுபோன்ற சூழலில்தான், ரஜினியின் புது அரசியல் கட்சி அறிவிப்பு வெளியாகி உள்ளது..

 பொறுமை

பொறுமை

இந்த கட்சியில் தனது ஆதரவாளர்களை இணைக்க அழகிரி ரெடியாகிவிட்டாராம்.. அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.. இவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே அதாவது ரஜினியிடம் இணைவதற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்தே காத்திருப்பவர்களாம்.. கட்சி ஆரம்பித்தவுடன் சேர்த்து கொள்வதாக ரஜினி சொல்லவும், இவ்வளவு காலம் பொறுமையுடன் காத்திருக்கிறார்களாம். இவர்களைதான் ஒன்றிணைக்கும் பணியில் அழகிரி இறங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.

 உதயநிதி

உதயநிதி

திமுகவில் ஏற்கனவே பல அதிருப்தியாளர்கள் உள்ளனர்... சீட் கேட்டு மறுக்கப்பட்ட சீனியர்கள் உள்ளனர்... உதயநிதி, பிரசாந்த் கிஷோரால் முக்கியத்துவத்தை இழந்த புள்ளிகள் உள்ளனர்.. இவர்களைதான் அழகிரி டார்கெட் செய்து, ரஜினி பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக தரப்புக்கு லேசான கலக்கமும் ஏற்பட்டு வருகிறதாம்!

English summary
Rajinikanth and MK Alagiris Mass Planing in Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X