காத்திருந்து பாருங்கள்.. ரஜினி சொன்ன பதிலால் மீண்டும் பரபரக்கும் போயஸ் கார்டன்.. சஸ்பென்ஸ்!
நேற்று போயஸ் கார்டன் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: நேற்று போயஸ் கார்டன் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல்நாள் இரவு அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தினார். சென்னை திரும்பி வந்த அவர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் எல்லாம் பெரிய வைரலானது. முக்கியமாக அவர் காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து பாஜகவை ஆதரித்து பேசினார்.

என்ன சொன்னார்
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகவும் சிறப்பாக ராஜ தந்திரத்துடன் செயல்பட்டனர். அவர்கள் காஷ்மீர் பிரச்சனையை மிகவும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று பாஜக உறுப்பினர் போலவே புகழ்ந்து தள்ளினார்.

வேறு என்ன சொன்னார்
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர், ஒரு காலத்தில் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கிய பங்கு வகித்தது. இப்போது அதன் பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் அது போல தமிழக அரசியலில் உங்களால் போயஸ் கார்டன் அரசியல் மையமாக மாறுமா என்று கேட்டார்.

என்ன பதில்
இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், இப்போது சொல்ல மாட்டேன்.. காத்திருந்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும், என்று குறிப்பிட்டார். எப்போதும் மழுப்பலாக பதில் சொல்லும் இவர் இந்த கேள்விக்கு மட்டும் கொஞ்சம் சஸ்பென்ஸ் வைத்து பதில் சொன்னார்.

திட்டம் என்ன
பாஜக - அதிமுக - ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் இந்த கூட்டணி கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் ரஜினியிடம் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளனர்.

போயஸ்
இதனால் ரஜினி முதல்வராகவோ அல்லது எதிர்கட்சித் தலைவராகவோ கண்டிப்பாக பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று ரஜினி நினைக்கிறார். இதனால் மீண்டும் போயஸ் கார்டன் தமிழக அரசியலில் மிக முக்கியமான அங்கமாக மாறிப்போகும். ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அவர்வேறு விஷயம் செய்ய வேண்டும்... வேறு என்ன.. முதலில் அவர் கட்சி தொடங்க வேண்டும்!
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications