தமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடைசியாக நம்புவது நடிகர் ரஜினிகாந்தை மட்டும்தான். அதனால் நடிகர் விஜய்யை கண்டு அக்கட்சி அச்சப்படுகிறது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவிக்கு இயக்குநர் அமீ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நடிகர் விஜய்யை பாஜக ஒருபோதும் தமது ஆதரவாளராக நம்பாது. நடிகர் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்குதான் இதற்கு காரணம். அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கால்தான் பாஜகவுக்கு பயமே ஏற்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் நம்முடைய திட்டம் தவிடுபொடியாகுமோ என்கிற அச்சம். இதில் வேறு என்ன இருக்க முடியும்? நடிகர் விஜய் ஒருவேளை பாஜகவுக்கு ஆதரவாக மாறிவிட்டால் வருமானவரித்துறை ரெய்டு உள்ளிட்டவை மாறும். இப்ப பேசுகிற வாய்கள் அப்போது மாற்றிப் பேசும்.
அன்று பாஜகவின் தூய்மை இந்தியா திட்ட தூதராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார். ஆனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கிய உடனே அவரை பாஜக விமர்சிக்கிறது. இப்போது கமல்ஹாசனை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்பதை பார்க்கிறோம். பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, கமல்ஹாசனை முட்டாள் என கூறுகிறார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடைசியாக நம்புவது ரஜினிகாந்தை மட்டும்தான். அதனால் அவரை பெருமைப்படுத்த கமல்ஹாசன், விஜய் போன்றவர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக. பாஜகவால் வாக்குகளை பெற முடியாது என்பதால் ரஜினிகாந்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது உண்மையானால், ரஜினியை எதிர்க்க விஜய்யை சில அமைப்புகள் தூக்கிப் பிடிக்கின்றன என்பதும் உண்மை.
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications