அறிவியல் வளர்ந்திருக்கு சரி.. அத வச்சு ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியாதே கண்ணா.. ரஜினி சரவெடி
அறிவியல் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் ஒரு சொட்டு ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியாது- ரஜினிகாந்த்
சென்னை: இன்று அறிவியல் எத்தனையோ வளர்ந்திருக்கு. ஆனால் அந்த அறிவியலை வைத்து ஒரு சொட்டு ரத்தத்தை கூட நம்மால் உருவாக்க முடியாது. அதெல்லாம் கடவுளின் சித்தம் என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் எந்த நிகழ்ச்சியில் பேசினாலும் அது ரசிக்கும் படியாக இருக்கும். காமெடியுடன் பேசுவார். சில நேரங்களில் கருத்தியல் இருக்கும். சில நேரங்களில் ஆன்மீகம் இருக்கும்.
அந்த வகையில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்த தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில் வெங்கையா நாயுடு மீது அவரது அரசியல் வாழ்க்கையில் சிறு களங்கம் கூட கிடையாது.

துணை ஜனாதிபதி
அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கொடுத்தார்கள். அவர் இன்னமும் உயர் பதவிகளை எல்லாம் வகிக்க தகுதியானவர். என் உயிரை காப்பாற்றியதில் மருத்துவருக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகளால் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா?

கடவுள் இல்லை
இதெல்லாம் தெரிந்திருந்தும் சிலர் கடவுள் இல்லை என சொல்கிறார்கள். அவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என எனக்கு தெரியவில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிக நபரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

பொதுக் கூட்டம்
அது போல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது, 10 அடி தூரத்தில் இருந்துதான் மக்களை சந்திக்க வேண்டும். நிச்சயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்கள். நான் மாஸ்க் போட்டாலே, மாஸ்கை எடுங்க தலைவா என்கிறார்கள். 10 அடி தூரத்தில் சந்திப்பு என்பது சாத்தியமாகுமா? நான் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு பிறகு வரவில்லை என கூறினால் நான் பயந்துவிட்டேன் என நினைப்பார்களே என மருத்துவரிடம் கூறினேன்.

மருத்துவர்
அதற்கு மருத்துவர், நீங்கள் சொல்ல வேண்டாம், உங்கள் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நான் பிரஸ் மீட் வைக்கிறேன் என கூறினார். இதன் பிறகுதான் நானே உடல்நிலையை காரணம் காட்டி அறிவித்தேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது குறித்த விளக்கம் வைரலாகி வருகிறது.
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட்











Click it and Unblock the Notifications