முதல்வர் விஜய்யை சந்திக்க விரும்பாத ரஜினிகாந்த்? முயற்சித்தும் நேரம் கொடுக்கலயா? பரபர தகவல்
சென்னை: ரஜினிகாந்த்- விஜய் சந்திப்பு நடக்காதது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினியிடம் வாழ்த்துப் பெற விஜய் முயற்சித்ததாகவும், பெங்களுர் செல்வதாக சொல்லி விஜய்யை சந்திக்க விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய் அரசியலில் எதிர் களத்தில் நின்றவர்கள் உள்பட மூத்த அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தை விஜய் சந்திக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

தமிழக முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி எதிர்முகாமில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருவது பாராட்டை பெற்று வருகிறது. அண்ணா காலத்தினை போல தமிழக அரசியலில் மீண்டும் அரசியல் நாகரீகம் தழைத்தோங்கி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தார். அதேபோல், வைகோ, அன்புமணி, சீமான் ஆகியோரை சந்தித்து இருந்தார். இன்று தனக்கு ஆதரவு அளித்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்து பெற்றார். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் மற்றும் அதிமுகவில் சிவி சண்முகம் தலைமையிலான குழுவையும் சந்தித்தார்.
ரஜினி தான் தவிர்த்துள்ளார்?
முதல்வர் விஜய், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்து பேசலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான ஒரு சந்திப்பு நிகழவில்லை. இந்த நிலையில், ரஜினிகாந்த் - முதல்வர் விஜய் சந்திப்பு நிகழாதது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் தரப்பில் ரஜினியை சந்திக்க முயற்சி நடந்ததாகவும் ரஜினிதான் தான் அதனை தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதாவது, ரஜினியிடம் வாழ்த்துப் பெற விஜய் முயற்சித்தாகவும், பெங்களுர் செல்வதாக சொல்லி விஜய்யை சந்திக்க விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், ரஜினிகாந்த் இதுவரை வாழ்த்து தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் கூட நேற்று வாழ்த்து கூறியிருந்தார்.
தவெகவை மட்டும் வாழ்த்தியிருந்தார்
ஆனால் ரஜினிகாந்த், தேர்தல் முடிவு வெளியான அன்று தமிழக வெற்றிக் கழகத்தை வாழ்த்தி பதிவிட்டு இருந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருந்தார். ரஜினியின் பதிவுக்கு தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கிட்டதட்ட ஒருவாரம் கழித்து இன்றுதான் ரிப்ளை கொடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார். திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களும் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தை யுத்தம் நடத்தியதை பார்க்க முடிகிறது.
செய்தியாளர்களிடம் ரஜினி என்ன கூறினார்
விஜய் முதல்வர் ஆவதற்கு முன்பாக நடந்த பல்வேறு பரபரப்பு திருப்பங்களை வைத்து யூகமாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், விஜய்யை சந்திப்பதை ரஜினிகாந்த் தவிர்த்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம் விஜய் முதல்வர் ஆனது பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு சிரிப்பை மட்டும் பதிலாக அளித்துவிட்டு வேறு எந்த கருத்தையும் சொல்லாமல் ரஜினிகாந்த் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை












Click it and Unblock the Notifications