ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஸ்டாலின், எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இன்று ரஜினிகாந்த்தின் 74வது பிறந்தநாள். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

rajinikanth mk stalin vijay

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: "எல்லைகள் கடந்து ஆறிலிருந்து 60 வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்டவர் நண்பர் ரஜினி. அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதி, மனமகிழ்ச்சியோடு திகழ்ந்து மக்களை மகிழ்விக்க விழைகிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: "தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்." என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்: "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: "நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: "அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை: "எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+