கட்சி துவங்கிய அர்ஜுன மூர்த்தி.. ரஜினிகாந்த் அசத்தல் "வாழ்த்து.." மக்கள் மன்றம் வேறு மாதிரி சொன்னதே!
சென்னை: இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அர்ஜுன மூர்த்தி துவங்கியுள்ள தனிக் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என்ற எதிர்பார்ப்பில், பாஜகவிலிருந்து பிரிந்து வந்து அங்கு சேர்ந்தார் அர்ஜுன மூர்த்தி. துவங்காத அந்த கட்சியின் சூப்பர்வைசர் பதவியை இவருக்கு தந்தார் ரஜினி.
ஆனால் ரஜினிகாந்த் திடீரென கட்சி துவங்கும் தனது முடிவை வாபஸ் பெற்றார். ரஜினி கட்சி தொடங்காத காரணத்தினால் அவர் கட்சியில் இருந்து வெளிவந்த நிலையில் எந்த கட்சியிலும் சேராமல் தனியாக இருந்து வந்தார் அர்ஜுன மூர்த்தி.

ரஜினி வாழ்த்து
ஆனால் தனியாக அவர் கட்சி தொடங்கப்போவதாக சில நாட்களுக்கு முன்பு கூறினார். ஆனால் அவர் தொடங்கும் கட்சிக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அந்த மன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது கட்சி துவங்க உள்ள அர்ஜுன மூர்த்திக்கு, ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அறிக்கை
"இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்"
"அன்புடன் ரஜினிகாந்த்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதரவா, வாழ்த்தா
அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு ரஜினி ஆதரவு எனக் கொள்வதா, வெறும் வாழ்த்து மட்டுமே என்று இதை எடுப்பதா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ரஜினிக்கு நெருக்கமானவர்களோ, இதை ஆதரவு என எடுக்க கூடாது. நட்பு அடிப்படையிலான வாழ்த்து என எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ரஜினி வாய்ஸ்
சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு, அவரின் உடல்நிலையை போன் போட்டு விசாரித்துள்ளார் ரஜினி. இதை டிடிவி தினகரன் வெளிப்படையாக தெரிவித்தார். அனைத்து தரப்பினரிடமும் நட்பை பாராட்ட ரஜினி விரும்புகிறார். எனவே அர்ஜுனமூர்த்தி அரசியல் கட்சிக்கு ரஜினி ஆதரவு தருவார், வாய்ஸ் தருவார் என்பது நடக்காது என்கிறார்கள் போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications