அஜித்துக்கு பத்மபூஷன் விருது.. விமான நிலையத்தில் சிம்பிளாக சொன்ன ரஜினி! என்ன சொன்னாருனு பாருங்க
சென்னை: திரையுலகில் பல மூத்த நடிகர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் தற்போது அஜித்குமாரும் இணைந்திருக்கிறார். அவருக்கு நடிகர் ரஜினி வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றிய முன்னோடிகளுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் அறிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பலருக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில், நடிகரும் விளையாட்டு வீரருமான அஜித்குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் இவரது அணி பங்கேற்று வெற்றி கோப்பையை வென்றிருந்தது.

இந்த வெற்றிக்கு, நடிகர்கள் மட்டுமல்லாது அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டனர். இப்படி இருக்கையில் கூலி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விமானம் மூலம் சென்னை வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரஜினி, 'வாழ்த்துகள்' என சிம்பிளாக ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
VIDEO | Tamil Nadu: Actor Rajinikanth (@rajinikanth) arrives at #Chennai airport.
— Press Trust of India (@PTI_News) January 28, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/R4Jzof6sJ4
இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அஜித் சாதனை:
நடிகர் அஜித் திரையுலகில், பெரிய பின்புலம் இல்லாமல் வந்தவர். தனது தனித்தன்மையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற அவருக்கு, விளையாட்டின் மீது குறிப்பாக பைக், கார் பந்தயங்களின் மீது அதிக ஈடுபாடு இருந்திருக்கிறது. தொடக்கத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டிருந்த அவர், சக போட்டியாளர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்டன்ட் செய்து காட்டி மிரட்டியிருந்தார். ஆனால் இந்த பைக் ரேஸ்தான் அவருக்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது.

ரேஸின் போது நடந்த விபத்து ஒன்றில் அஜித் கடுமையாக காயமுற்றார். அவரால் அடுத்த 6 மாதங்களுக்கு எந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. மிக குறிப்பாக இவருக்கு வாய்ப்பு வழங்கிய முதல் இயக்குநரின் படத்தை முடித்துக்கொடுக்காமல் போனது. இந்த புள்ளிதான் அஜித்தை பைக் பந்தயத்திலிருந்து கார் ரேஸ் நோக்கி நகர்த்தியது. தான் பாதிக்கப்படுவது, தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி சினிமா துறையையும் பாதிக்கிறது என்பதை அவர் உணர்ந்தார்.
அதேபோல பைக் பந்தயத்தில் ஆபத்துகள் அதிகம் இருக்கிறது என்பதையும் தெரிந்துக்கொண்ட அஜித், கார் ரேஸில் கவனம் செலுத்தினார். ஆனால் கார் ரேஸ் என்பது அந்த அளவுக்கு சுலபமானது கிடையாது.
மணிக்கு 200 கி.மீக்கும் அதிமான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் காரை நீங்கள் ஓட்டும்போது ஒரு நொடி கவனத்தை சிதற விட்டால் கூட அது மரணத்திற்கு வழி வகுத்துவிடும். மட்டுமல்லாது G-Force எனப்படும் விசை உங்களை கடுமையாக சோதித்துவிடும். இந்த சவால்களை எல்லாம் தாண்டி, நடுத்தர வயதை கடந்து கார் பந்தயத்தில் அஜித் இன்றும் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார் எனில், இதுதான் அவருடைய பெரிய சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications