பத்து பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தா யாரு பலசாலி.. மோடிக்கு ரஜினி வாழ்த்து!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி சாதித்து விட்டதாக ரஜினிகாந்த் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

17-ஆவது மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ எதிர்க்கட்சியை பிடிப்பதற்கான எண்களைகூட இன்னும் பெறவில்லை என்பது சோகத்திலும் சோகம்.

Rajinikanth congratulates PM Narendra Modi

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில், மரியாதைக்குரிய மோடி அவர்களே மக்களவை தேர்தலில் சாதித்துவிட்டீர்கள்.

மனப்பூர்வமான வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தேர்தல் நிலவரம் குறித்து ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கத்துடன் ஆலோசனை செய்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த் இது வரை வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது இலக்கு 234 தொகுதிகள்தான் என தெரிவித்திருந்தார். மேலும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+