தலைவராக வேண்டாம்.. ரஜினியை சூப்பர் ஸ்டாராக பார்க்க மட்டுமே ஆசை.. அடித்துச் சொன்ன வாசகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த்தை எப்படிப் பார்க்க ஆசைப்படறீங்க என்ற கேள்விக்கு நெற்றி பொட்டில் அடித்தாற் போல் ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் பதில் அளித்துள்ளார்கள்.

தனது 45 ஆண்டு கால திரைப்பயணத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவருக்கு கொடுத்து இந்த தமிழகமே அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இந்த நிலையில் அவரை ஆசையாக தலைவா தலைவா என அழைக்கும் ரசிகர்கள் அவரை அரசியல் கட்சியின் தலைவராக்க விரும்பினர்.

இதனால் 30 ஆண்டுகளாக அவரை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வருவதாக கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி அறிவித்தார்.

புதிய கட்சி

புதிய கட்சி

ஜனவரி மாதம் புதிய கட்சியை தொடங்குவதாகவும் அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த்தை எப்படிப் பார்க்க ஆசைப்படறீங்க என ஒன் இந்தியாவில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

நிம்மதியா இருக்க

நிம்மதியா இருக்க

இதில் சூப்பர் ஸ்டார் மட்டும் போதும், தலைவராக பார்க்க ஆசை, அவரை நிம்மதியாக இருக்க விடுங்கப்பா ஆகிய 3 ஆப்ஷன்கள் இருந்தது. இதில் அவரை நிம்மதியா இருக்க விடுங்கப்பா என்ற ஆப்ஷனுக்குத்தான் 52.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ரஜினிக்கு பொருத்தம்

ரஜினிக்கு பொருத்தம்

தற்போதைய களத்திற்கு இந்த ஆப்ஷன் ரஜினிக்கு பொருத்தமானது. கொரோனா காலம், புதிய உருமாறிய கொரோனா, வயது மூப்பு ஆகியவை உள்ள நிலையில் அவரை மேற்கொண்டு அலைக்கழிக்காமல் நிம்மதியாக இருக்க விடுவதுதான் சாலச் சிறந்தது என மக்கள் கருதுகிறார்கள்.

நடுநிலையாளர்கள்

நடுநிலையாளர்கள்

அது போல் அரசியலுக்கு வந்துவிட்டால் அவரால் படத்தில் நடிக்க முடியாது. தற்போது ஆண்டுக்கு ஒரு படம் வருவதே எப்போது எப்போது என ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிருகிறது. இந்த நிலையில் படமும் இல்லாவிட்டால் என்ன செய்வது? அதனால் நடுநிலையானவர்களுக்கு ரஜினியை சூப்பர்ஸ்டாராகவே பார்க்க ஆசைப்படுகிறார்கள். இந்த ஆப்ஷனுக்கு 43.28 சதவீதம் பேர் வாக்களித்தார்கள்.

தவிடுபொடியாக்கிய ரஜினி

தவிடுபொடியாக்கிய ரஜினி

அது போல் தலைவராக பார்க்க ஆசை, இந்த ஆப்ஷனுக்கு 3.91 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள். அதாவது ரஜினி அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராகி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதாகும். ஆனால் இன்று 3.91 சதவீதம் பேரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கிவிட்டு அரசியல் வருகைக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+