Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினிகாந்த்தை பார்த்ததுமே.. யாரிந்த பெண்? மொத்த பேரின் கவனத்தை குவித்து..போயஸ் கார்டன் வீட்டில் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை பார்த்ததுமே, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.. தீபாவளி வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டதுடன், ரஜினிகாந்த்தை நேரில் பார்த்ததுமே உணர்ச்சிவசப்பட்டனர்.

பண்டிகை நாட்களில் இவரிடம் வாழ்த்து பெறுவதற்காக, இவரது இல்லம் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம். அதிலும், ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும், நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.. அந்தவகையில், மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டனில் திரளுவார்கள்.

Rajinikanth Deepavali Wishes and Do you know Who is this Minor Girl in Chennai Poes Garden house

நடிகர் ரஜினிகாந்த்தும், தன்னை காண வரும் ரசிகர்களுக்கு, தன்னுடைய வீட்டில் இருந்தபடியே கையசைத்து வாழ்த்து தெரிவிப்பார்.. ரஜினி வாழ்த்துக்களை சொன்னதுமே, ரஜினிகாந்த் சார்பில் ரசிகர்களுக்கு லட்டு வழங்கப்படும்.

வாழ்த்துக்கள்: கடந்த வருடம்கூட, நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு 100க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு தீபாவளி வாழ்த்து தெரிவித்துவிட்டு, கை அசைத்தும், வணக்கம் தெரிவித்துவிட்டு போனார்.. அப்பொழுது ரசிகர்கள், "ரஜினி வாழ்க" என உற்சாக கோஷமிட்டனர்...

நேற்றும்கூட, தீபாவளி பண்டிகை என்பதால், ரஜினி வீட்டின் முன்பு, காலையிலிருந்தே ரசிகர்கள் குவிய துவங்கினர்.. அவர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து சொன்னார்.. ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.. "தலைவா தலைவா" என்று கைகளை உயர்த்தி முழக்கமிட்டனர்.. பிறகு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

கலங்கிய சிறுமி: ரஜினியை பார்த்ததுமே, மோகனா லஷ்மி என்ற சிறுமி கண்கலங்கிவிட்டார்.. உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார்.. ரஜினி கையசைத்து சென்றபிறகும்கூட, கண்கலங்கி கொண்டேயிருந்தார் இந்த சிறுமி..

நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்காக, பல நாட்களாகவே, போயஸ் கார்டன் வந்துபோனவர் இந்த சிறுமி.. பலமுறை பார்க்க முயன்றும் முடியாததால், எப்படியும் தீபாவளிக்கு, ரசிகர்களை ரஜினி சந்திப்பார் என்பதால், சிறுமியும் நம்பிக்கையுடன் வந்திருந்தார்..

முதன்முதலாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் பார்த்ததால் கண்கலங்கி அழுதுவிட்டார்.. இது தொடர்பாக சிறுமி சொல்லும்போது, நான் நடிகர் ரஜினிகாந்தை பார்க்க பலமுறை வந்திருக்கிறேன்.. ஆனால், இன்னைக்குதான் அவரை நேரில் பார்க்க முடிந்தது என்று நா தழுதழுக்க உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்.

சேலம் சிறுமி: சமீபத்தில்கூட, ஒரு சிறுமி சேலத்திலிருந்து ரஜினிகாந்த்தை சந்திக்க சென்னை வந்திருந்தார்.. நடுராத்திரியில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்குள் நுழைய பார்த்தார்.. இதை பார்த்ததுமே அங்கிருந்த செக்யூரிட்டி, "அவரை இப்போது பார்க்க முடியாது.. நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று விசாரித்துள்ளார்..

ஆனால், தன்னை பற்றி எந்த விவரத்தையுமே சொல்லாத சிறுமி, ரஜினி சாரை இப்பவே பார்த்தாக வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறார்.. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற செக்யூரிட்டி, உடனடியாக இது குறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தந்திருக்கிறார்.. போலீசாரும் விரைந்து வந்து, சிறுமியிடம் சாதுர்யமாக பேசி, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். பிறகு விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள்.

Rajinikanth Deepavali Wishes and Do you know Who is this Minor Girl in Chennai Poes Garden house

10ம் வகுப்பு மாணவி: அந்த பெண், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் என்று தெரிய வந்தது.. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாராம். "கிளாஸ் டீச்சரை பார்த்துவிட்டு வருகிறேன்" என்று வீட்டில் பெற்றோரிடம், பொய் சொல்லிவிட்டு, சேலத்திலிருந்து சென்னைக்கு பஸ் ஏறி, கோயம்பேட்டிற்கு, அன்றைய தினம் இரவு வந்து சேர்ந்துள்ளார்.

பிறகு கோயம்பேட்டிலிருந்து, போயஸ் கார்டனுக்கு வருவதற்குள் நைட் 1 மணியாகியிருக்கிறது.. இந்த சிறுமிக்கு உறவினர்கள் அதாவது, சிறுமியின் சின்னபாட்டி சென்னை பல்லாவரத்தில் இருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.. பிறகு, அவர்களை அழைத்து, அந்த பெண்ணை ஒப்படைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+