ஆமா, ரஜினி ஏன் கமலை பாராட்டலை.. ஆச்சரியமா இருக்கே!

இதுவரை கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லாமல் இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் நண்பர் கமல்ஹாசன்.. அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துகள் என்று முதலில் வாழ்த்தியவர் ரஜினிதான்! ஆனால் இன்று அந்த நண்பர் மக்கள் மத்தியில் மிக முக்கிய அடையாளத்தைப் பெற்றுள்ள நிலையில் அதை ரஜினி வாழ்த்தாதது ஆச்சரியமாக உள்ளது.

ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை. வரப் போவதாக சொன்னார். ஆனால் இன்னும் வரவே இல்லை. ரஜினி அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தபோது அதை கமல்ஹாசன் ஆதரித்து வரவேற்றார் என்பது நினைவிருக்கலாம்.

Rajinikanth did not appreciate Kamal Haasan

ஆனால் கட்சி ஆரம்பித்தபோது வரவேற்ற ரஜினி, இன்று கமல் மக்கள் மத்தியில் நல்லதொரு அடையாளம் பெற்றுள்ளபோது வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

இப்படியெல்லாம் ரஜினி வாழ்த்தும் பழக்கம் இல்லை என்றும் கூற முடியாது. ஏனென்றால் "நீங்கள் சாதித்து விட்டீர்கள்" என்று பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தியுள்ளார். அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் வாழ்த்தியுள்ளார்.

கமல்ஹாசன் அரசியலில் பெரிய இடத்தைப் பிடிக்க முடியாது என்றுதான் பலரும் பேசி வந்தனர், கேலி செய்தும் வந்தனர். அவர் பேசியதை சர்ச்சையாக்கினர். ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு இடத்தை பிடித்துள்ளார் கமல்ஹாசன்.

கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே இதை கமல்ஹாசன் சாதித்திருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். அப்படி இருக்கும்போது ரஜினியிடமிருந்து முதல் வாழ்த்து வரும் என்று எதிர்பார்த்தால் இதுவரை வரவில்லை. ஒரு வேளை கமல்ஹாசனின் எழுச்சியில் தானும் பங்கு கொண்டால் நாளை அது நமக்கு பாதகமாகி விடுமோ என்று ரஜினி நினைத்து விட்டாரோ என்னமோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+