ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தந்த தீபாவளி பரிசு... 'வா தலைவா' என முழக்கமிட்டு ஆரவாரம்..!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து தீபாவாளி வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லம் முன்பு காலை முதலே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவியத் தொடங்கினர். தலைவனை தரிசித்தால் தான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்றும் தலைவரை பார்க்காமல் போகமாட்டோம் எனவும் கூறி அங்கேயே காத்திருக்கத் தொடங்கினர்.

கொரோனா காலம் என்பதால் இப்போது வேண்டாம் என ரஜினி இல்ல பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்துக் கூறியும் ரசிகர்கள் அதைக் கேட்பதாக இல்லை. ரஜினியை வாழ்த்து முழக்கம் எழுப்பியவாறு நின்று கொண்டிருந்தனர்.
இந்த தகவல் ரஜினிகாந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து காலை 9.30 மணியளவில் ரசிகர்களை சந்திக்க தயாரானார் அவர். இதையடுத்து முகக்கவசம் அணிந்தவாறு வீட்டின் சுற்றுசுவருக்குள் நாற்காலி போடப்பட்டு அதில் ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார் ரஜினி.
மேலும், எல்லோரும் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்க என ரஜினி கூறிய வாழ்த்தால் நெகிழ்ந்து போன அவரது ரசிகர்கள் ரசிகர் மன்ற கொடியை தாங்கியவாறு தலைவா.. நீ வா தலைவா.. என முழக்கம் எழுப்பினர். ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு மீண்டும் ஒரு முறை அவர்களை நோக்கி கையசைத்த ரஜினி ஓரிரு நிமிடங்களில் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
சுமார் 5 அடி இடைவெளியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தீபாவளியன்று பொதுமக்கள் கோயில்களுக்கு செல்வது வழக்கம். ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை தீபாவளி, புத்தாண்டு என எந்த பண்டிகையாக இருந்தாலும் போயஸ் கார்டனுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications