“நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?” ரஜினிகாந்த் கொடுத்த உடனடி ரியாக்ஷன்!
கோவை: நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன் கவனம் பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் அரசியல் களம் கண்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அதுபற்றிய கேள்வியைத் தவிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
'ஜெயலர் - 2' படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா செல்வதற்காக இன்று சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய ரஜினிகாந்த், "நான் ஜெய்லர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும்" என்று தெரிவித்தார்.

அப்போது நடிகர்களுக்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நோ கமெண்ட்ஸ்" என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார். நடிகர் விஜய் அரசியல் களம் கண்டுள்ள நிலையில் 2026 சட்டசபை தேர்தலை முதன்முறையாகச் சந்திக்கிறார். 2 மாநாடுகளை நடத்தி உள்ள உள்ள விஜய், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
விஜய்யின் பிரச்சார பயணங்களில் அதிகமான தொண்டர்கள், ரசிகர்கள் கூடி வருகின்றனர். விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி, மக்களைச் சந்தித்து வரும் சூழலில் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அதுபற்றிய கேள்வியைத் தவிர்த்துள்ளார் ரஜினிகாந்த்.
மேலும், யாத்ரி சேவா திவாஸ் நாளையொட்டி கோவை விமான நிலையத்தில் அவிநாசிலிங்கம் கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை வரவேற்றனர். அப்போது, சென்னையில் இருந்து வந்த நடிகர் ரஜினிகாந்த் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. வேண்டுகோளை ஏற்று மோடி கட் அவுட் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "ராஜ்கமல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து ஒரு படம் பண்ண போகிறோம். அந்த படத்திற்கான இயக்குநர் இன்னும் முடிவாகவிலலை. கமலும் நானும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை. அதற்கான கதை, கதாபாத்திரம் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிப்போம். ஆனால் அதற்கான கதை, கதாபாத்திரம், இயக்குநர் என யாரும் இன்னும் முடிவாகவில்லை," என்று தெரிவித்தார்.
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்!











Click it and Unblock the Notifications