ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாதுங்க! ஃபார்முலா 4 பந்தயத்திற்கு வாழ்த்துகள்- ரஜினிகாந்த்
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது, சாரி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் கூலி படம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் இவ்வாறு கூறியிருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாதுங்க. சாரி. நடிகர் சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய படமும் நன்றாக ஓட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். மேலும் கார் பந்தயத்தை பார்க்க போறீங்களா என செய்தியாளர்கள் கேட்ட போது இல்லைங்க நேரம் இல்லை என தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் வேட்டையனும் சூர்யாவின் கங்குவாவும் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸாவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு படங்களில் ஏதாவது ஒன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யா ஒரு விழாவில் பேசிய போது , அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாகிறது.
ரஜினி சார் மூத்தவர். நான் பிறக்கும் போது நடிக்க வந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர். அந்த மூத்தவரின் படம் வெளியாவது மட்டும்தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என சூர்யா தெரிவித்திருந்தார். எனவே அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் மட்டும் ரிலீஸாகிறது.
இந்த நிலையில் கேரள சினிமாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் ஹேமா கமிட்டி அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் இருந்தன. அதில் நடிகைகள் பாலியல் ரீதியாக என்னென்ன கொடுமைகளை அனுபவித்துள்ளார்கள் என்பத குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாலியல் வக்கிரம் என்பது கேரள சினிமாவில் மட்டும் இல்லை. தமிழ் சினிமாவிலும் இருக்கிறது. எனவே ஹேமா கமிட்டியை போல் தமிழகத்திலும் ஒரு கமிட்டியை வைத்து பாலியல் வக்கிரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளாவில் பெரும் புயலை கிளப்பி வரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். டிவி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களிலும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த், தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications