ரஜினியிடம் மல்லுக்கட்டிய துரைமுருகன்.. முடித்துவைத்த ஸ்டாலின்! அமெரிக்கா செல்லும் முன் கூறிய அட்வைஸ்
சென்னை: நடிகர் ரஜினிகாந்திடம் மல்லுக்கட்டிய அமைச்சர் துரைமுருகன் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ரஜினிகாந்த் - துரைமுருகன் விவகாரம் குறித்து அமெரிக்கா செல்லும் முன்பு முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அவர் கூறிய பதில் கவனம் ஈர்த்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எவ வேலு. இவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்' எனும் பெயரில் நூலாக எழுதியிருந்தார்.

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 24ம் தேதி நடந்தது. முதல்வர் ஸ்டாலின் நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் அதனை பெற்று கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது, ‛‛ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு பார்லிமென்ட் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை சொல்லும். எத்தனை கட்சிகள் தங்களின் நிறுவன தலைவர் மறைந்த பிறகு சந்ததியினர் மூலம் கட்டிக்காக்க முயன்று தோல்வியடைந்துள்ளனர்.இன்னும் சிலர் திண்டாடி வருகின்றனர்.
எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க.. துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டி ஆட்டியவர். முக ஸ்டாலின் Hats off too you..'' என பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனுடன் நட்பாக இருந்து வருகிறார். இதனால் அவரது பெயரை ரஜினிகாந்த் குறிப்பிட்டு பேசினார். இதனால் துரைமுருகன் கடும் கோபமடைந்தார். இதையடுத்து மறுநாள் ரஜினி காந்தின் பேச்சு குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன், நேற்று காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, மூத்த நடிகர்கள் பல்லுப்போய், வயசாகி, தாடி வளர்த்துக்கொண்டும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை" என்றார். இதன்மூலம் ரஜினிகாந்தை அவர் மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் துரைமுருகன், ரஜினிகாந்தின் பேச்சை சீரியஸாக எடுத்து கொண்டதாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி விவாதமும் கிளம்பியது. இதுபற்றி ரஜினிகாந்திடம் கேட்டதற்கு துரைமுருகன் எனக்கு நீண்டகால நண்பர். அவர் என்னச் சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது'' என்றார். அதன்பிறகு காட்பாடியில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம், ‛எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பார்க்க வேண்டாம். நாங்கள் எப்போதும்போல நண்பர்களாக இருப்போம்'' என்றார்.
இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையிடம் அவரிடம், ‛‛அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் விவகாரம் பற்றி என்ன சார் சொல்கிறீர்கள்'' என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛அவங்க 2 பேரும் நீண்டகால நண்பர்கள். அவரும் (ரஜினிகாந்த்) சொல்லிட்டாரு. இவரும் (துரைமுருகன்) சொல்லிட்டாரு. அதை நீங்க அவரு (துரைமுருகன்) சொன்னமாதிரி நகைச்சுவையாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்து கொள்ள கூடாது. அவர் சொல்றதை தான் நானும் திரும்ப சொல்ல உள்ளேன்'' என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
உதயநிதிக்கு பாதிப்பு என்பதால் கனிமொழிக்கு சீட் இல்லையா? துரைமுருகன் பதில் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications