இதை பாருங்க ரஜினி சார்.. கடைசியில் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார்களே.. ஆச்சரியமாவும் பயமாவும் இருக்கு
ரஜினி ரசிகர்கள் கடுமையான அதிருப்தி, ஏமாற்றத்தில் உள்ளனர்
சென்னை: கடைசியில் தன்னுடைய ரசிகர்களை தனியாக புலம்பும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டு விட்டது ரஜினியின் அரசியல் பிரவேசம்! அப்படி ஒரு அதிர்ச்சி வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்புக்கு ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் 'வா தலைவா வா' என்று அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். நேற்றில் இருந்து சோஷியா மீடியா முழுவதுமே ரஜினி செய்திதான் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

ஆலோசனை
கடைசி கட்டமாக, ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றைய ஆலோசனைக்கு பிறகாவது ரஜினி ஏதாவது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. வழக்கம்போல, ஆலோசனையுடன், சில மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டும் மற்றிக்கொள்ளவில்லை என்றும் கூறியதாக தகவல் வெளியானது.

மனநிலை
என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று ரஜினியும், அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று கொள்வோம் என்று நிர்வாகிகளும் சொல்லிவிட்டனர்.. இவர்கள் இப்படி சொல்லி கொண்டார்களே தவிர, கடைநிலை ரசிகர்களின் மனநிலையை அறியவே இல்லை.

வெற்றிப்படம்
கால் நூற்றாண்டாக ரஜினி வருகைக்காக காத்து கொண்டும், எத்தனையோ பேர் ரஜினியை இழித்தும், பழித்தும், விமர்சித்தும், கிண்டலடித்தும்வந்தாலும், ரஜினி என்ற ஒற்றை மனிதனுக்காக அனைத்தையும் பொறுத்து கொண்டிருப்பவர்கள் இந்த தீவிரமான ரசிகர்கள்தான்.. முகமறியா இவர்கள்தான் ரஜினியின் ஒவ்வொரு படத்தையும் வெற்றிபடங்களாக்கி பணத்தை வாரி தந்துள்ளனர்.

விரக்தி
கடைசியில், நேற்றும் ரஜினி ஏமாற்றத்தையே பரிசாக தந்துவிட்டு சென்றுள்ளார்.. இந்நிலையில், ஒரு ரசிகர் விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார் போலும்.. அது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. சுவற்றில் ரஜினியின் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.. அந்த போஸ்டருக்கு முன்பு நின்று கொண்டு, ரசிகர் ஒருவர் ரஜினியுடன் பேசி கொண்டிருக்கிறார்.. இவர் பேசி கொண்டிருக்கிறாரா அல்லது திட்டி கொண்டிருக்கிறார அல்லது அவரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.. ஆனால் பார்ப்பதற்கு பாவமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது..

வாட்ஸ்அப் வீடியோ
இந்த வீடியோதான் வாட்ஸ்அப்பில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது எப்போது நடந்தது என்றும் தெரியவில்லை.. நிஜமாகவே ரஜினி முன்னாடி நின்றிருந்தால், அவரிடம் எப்படி பேசுவாரோ, அதுபோலவே, தன் கை, காலை ஆட்டிக் கொண்டு, ஆதங்கத்துடன் பேசி கொண்டிருக்கிறார்.. அவர் என்ன பேசுகிறார் என்று நமக்கு தெளிவாக தெரியாவிட்டாலும், கண்டிப்பாக இதைதான் பேசியிருப்பார் என்பதை நம்மால் அடித்து சொல்ல முடியும்.

வைரல் வீடியோ
காரணம் இந்த ரசிகனின் மனநிலை தான், ரஜினி ரசிகரின் அநேக மனநிலையும்.. பொறுத்து பொறுத்து பார்த்து சிலர் திமுக பக்கம் தாவி வருகிறார்கள்.. சிலர் இன்னமும் போயஸ் கார்டன் வீட்டின் முன்பு எதையோ நம்பி நின்று கொண்டிருக்கிறார்கள்.. சிலர் இதுபோல போஸ்டரிடம் பேச ஆரம்பித்து விட்டனர்.. இதில் ஒன்றையாவது ரஜினி கவனத்தில் இனி எடுத்து கொண்டு, உணர்வுபூர்வமாக அணுக வேண்டும்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications