அட.. ரஜினி சொன்னத சீரியசா எடுத்துகிட்டாங்களே.. மக்கள் மன்றங்கள் பண்ற வேலையை பாருங்க- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட வேண்டும்.. இப்போ இல்லாவிட்டால் எப்போதும், இந்த திராவிட கட்சிகளை தோற்கடிக்க முடியாத நிலை உருவாகிவிடும் என்று ரஜினிகாந்த் கடந்த வாரம் அளித்த பத்திரிக்கையாளர் பேட்டியில் சொன்னாலும் சொன்னார், ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் தீவிரமாக களமிறங்கி பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

புரட்சி ஏற்பட்டு, அது தனக்கு தெரிந்தால்தான் கட்சி ஆரம்பித்தால் பலன் கிடைக்கும் என்று ரஜினி கூறியிருந்தார். எனவே, மக்கள் மத்தியில் அரசியல் புரட்சி ஏற்படாவிட்டால், ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்ற கருத்துக்கள் பரவ ஆரம்பித்துள்ளன.

அரசியலுக்கு வராமல் தப்பிக்கத்தான் ரஜினி இப்படி சொல்கிறார் என்ற விமர்சன பார்வைகளும் உண்டு. ஆனால், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினி அரசியலுக்கு வருவார் என நம்புகிறார்கள்.

ஊர் மக்களிடம் பிரச்சாரம்

"தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை, நேரடியாக மக்களிடம் கொண்டு சென்ற தர்மபுரி ரஜினிமக்கள்மன்றம்" என்று ட்வீட் செய்துள்ளார்கள். இதில் இளைஞர்கள், ஊர் மக்களிடம் ரஜினியின் அரசியல் பற்றி பேசுவதை இந்த டுவிட்டரில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்க முடிகிறது. இப்படியெல்லாம் மக்கள் மத்தியில் பேசி அவர்கள் நாடித் துடிப்பை ரஜினிக்கு கொண்டு செல்ல இவர்கள் ரொம்பவே மெனக்கெட்டு பணியாற்றுகிறார்கள்.

வேகம் எடுக்கிறதாம்

"முன்ன விட பல மடங்கு வேகம் எடுக்கும் ரஜினிமக்கள்மன்றம்" என்று சொல்கிறது இந்த ட்வீட். இதில், மக்கள் மன்றத்தினர் செய்யும் பணிகள் வீடியோவாக விரிகிறது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நிஜமாகவே இவர்கள் நம்புவதை இந்த பணிகளை வைத்து பார்த்தால் புரிகிறது.

2 கட்சிக்கும் வேண்டாம்

"தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டி கடலூர் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் களப்பணி" என்கிறது இந்த ட்வீட். வயசானவர்களுக்கு, மாணவர்களுக்கு, பெண்களுக்காக ரஜினி கட்சி தொடங்கப்போகிறார். திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு நீங்கள் இன்னும் களைதான் பறித்துக் கொண்டே இருக்கீங்க. நான் முதல்வர் ஆக மாட்டேன் என்று சொல்லும் ஒரு சிறந்த தலைவர் ரஜினிகாந்த். இப்படி பிரச்சாரம் நடக்கிறது. அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பஸ்சில் பிரச்சாரம்

ஆதரவு பெருகும் மக்கள்_தலைவரின்_அரசியல் #புதுக்கோட்டை_மாவட்டம், அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்.. இப்ப இல்லைன்னா... எப்பவுமே இல்லை!!! இப்படி சொல்கிறது இந்த ட்வீட். தனியார் பஸ் ஒன்றில் ஏறி நின்று பயணிகளிடம் துண்டறிக்கை கொடுத்து, மக்கள் மன்றம் நிர்வாகிகள், பிரச்சாரம் செய்வதை பார்க்க முடிகிறது.

தஞ்சையில் ஒளிபரப்பு

தஞ்சை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் மாற்றத்திற்கான புரட்சி மிகு உரை ஒளிபரப்பப்பட்டது.மேலும் மக்களிடம் அரசியல் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் முழுக்க இப்பணி தொடரும். இப்படி சொல்கிறது இந்த ட்வீட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+