போர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று இன்றைய தினம் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.ட்விட்டரில் #Rajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் இன்றைய தினம் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இன்றைய மிக முக்கியமான அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் பலரும் #Rajinikanth என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அவரைப்பற்றி நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். சீக்கிரம் அரசியலுக்கு வா தலைவா என்று அழைப்பு விடுத்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி எனச் சபதம் எடுத்து 3 வருடமாகிவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து விட்டது.

போர் வரும் போது வருவோம் என்று சொன்னார் ரஜினிகாந்த், அவர் சொன்ன பிறகு பல போர்கள் வந்து விட்டன. அவரைத்தான் ஆளைக்காணோம்.

சீக்கிரம் வா தலைவா

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் ஸ்டைல் நடிப்புக்கு ரசிகர்களாக உள்ளனர். சீக்கிரம் வாங்க தலைவா என்று அழைப்பு விடுக்கிறார் இந்த ரசிகை.

பெண் ரசிகர்கள்

ரஜினி ரசிகர்களுக்கு பெண் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்று கூறி பதிவிட்டு இருக்கிறார் இந்த ரசிகை.

இந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறோம்

வா தலைவா வா... இந்த நாளுக்காகத்தான் நீண்ட வருடங்களாக காத்திருக்கிறோம் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்.

புயலுக்கு முன் அமைதி

புயலுக்கு முன் ஒரு அமைதி இருப்பது போல ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு முன்பாக ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பும், மண்டபத்தின் வாசலிலும் அமைதியாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாபாவின் கட்டளை

மார்ச் 12ஆம் தேதி ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இன்றைய தினம் ரஜினிகாந்த் பேசப்போவது எடுக்கப்போகும் முடிவும் முக்கியமானதாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

Just BABA things! #Rajinikanth

March 12th - Most important speech in Leela palace
November 30th - Most important discussion with RMM

போர் தொடுக்கலாமா

கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் போர் தொடுக்கலாமா என்று கேட்பார், அந்த படத்தின் வீடியோ கிளிப்பிங்ஸ் பதிவிட்டு ரசிகர்கள் பலரும் ட்விட்டர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+