சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தேயாக வேண்டும்.. சென்னையில் இன்று "அறப்போராட்டம்.." குவியும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி 'ஆன்மிக அரசியல் அழைப்பு விழா' என்ற பெயரில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் இன்று நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதித்துள்ளது.

Recommended Video

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டும்.. ரசிகர்கள் என சென்னையில் போராட்டம் - வீடியோ

    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ரஜினி ரசிகர்கள் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    இதனால் ரஜினி வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெரும் போராட்டம்

    பெரும் போராட்டம்

    இந்தப் போராட்டமானது ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர், ரஜினி மக்கள் மன்ற மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் ராம்தாஸ் தலைமையில் நடைபெறுகிறதாம்.

    காவல்துறை அனுமதி

    காவல்துறை அனுமதி

    இந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்திற்கு நேற்று காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. எனவே, ரசிகர்கள் இன்று காலை முதல் போராட்டத்தை துவங்க உள்ளனர்.

    முடிவை மாற்றி பல்டி

    முடிவை மாற்றி பல்டி

    அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் டிசம்பர் 3ம் தேதி அறிவித்து விட்டு பிறகு 3 வாரங்களில் முடிவை மாற்றிக் கொண்டு கட்சியே துவங்கப்போவதில்லை என அறிவித்தார்.

    அணி வகுக்கும் ரசிகர்கள்

    அணி வகுக்கும் ரசிகர்கள்

    எனவே ரஜினியை அரசியலுக்குவர கோரி போராட்டத்தில் குதிக்கிறார்கள் ரசிகர்கள். பிற பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக சென்னை நோக்கி ரஜினி ரசிகர்கள் அணி வகுக்கிறார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட கூடாது என தலைமை ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    English summary
    Insisting that actor Rajinikanth should come to politics, Rajinikanth fans announced that they will take part in a protest in Valluvar Kottam, Nungambakkam, Chennai on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X