100 ரூபாய் பைன்.. சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரஜினிகாந்த்.. அபராதம் விதித்த போலீஸ்.. வெளியான ரசீது!
நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம் கட்டி உள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம் கட்டி உள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அவர் கடந்த 21ம் தேதி கேளம்பாக்கத்திற்கு தனது சொகுசு காரில் சென்றார். ஆனால் இவர் கடந்த 21ம் தேதி சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் பெற்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது தொடர்பாக ஆவணங்களை சரி பார்த்து வருகிறோம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது. அதன்பின் ரஜினி கடந்த 23ம் தேதி வாங்கிய இ பாஸ் இணையத்தில் வெளியானது.

இ பாஸ் விண்ணப்பம்
தேனாம்பேட்டையில் இருக்கும் ராகவேந்திரா இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் செல்ல அவர் இ பாஸ் பெற்று இருக்கிறார். இதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்று காரணம் கூறியுள்ளார். அவரின் இந்த இ பாஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதில் அவரின் கார் எண் தொடங்கி போன் எண் வரை எல்லாம் இருந்ததும், அந்த விவரங்கள் இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது .

கார் எண் விவரம்
இந்த கார் எண் மூலம், இவரின் காருக்கு சென்னை டிராபிக் போலீஸ் 100 ரூபாய் அபராதம் விதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபராதத்திற்கான ரசீது நேற்று இணையத்தில் வெளியானது. இந்த ரசீது விவரமும் அவரின் இன்னோவா கார் நம்பர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை பலரும் நேற்று இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

அபராதம் விதித்தார்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம் கட்டி உள்ளார். நேற்று செல்லானில் இருந்த அந்த 100 ரூபாய் அபராதம் இதற்காகத்தான் விதிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாழம்பூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் .

கடந்த மாதமும்
ஜூன் 26 ஆம் தேதி அபராதம் போடப்பட்டதாக ரசீது விவரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் அதற்கு நேற்று வரை அபராதம் செலுத்தவில்லை. அபராத தொகையினை ஜூலை 23ல் ரஜினிகாந்த் செலுத்தியுள்ளார். தற்போது இந்த அபராத ரசீது மற்றும் பணம் செலுத்திய ரசீதுகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications