ஏ.. சூப்பரப்பு... "பாட்ஷா".. கைதட்டி ரசித்த குழந்தை.. வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய ரஜினி..
சென்னை: பாட்ஷா படத்தை கைதட்டி ரசித்த குழந்தைக்கு நன்றி என ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Recommended Video
ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அதாவது சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இதற்கேற்ப ரஜினிகாந்த் என்றால் வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள்.

உங்களுக்கு யாரை பிடிக்கும் என கேட்டால் பேசும் குழந்தை கூட ரஜினி தாத்தா என மழலையில் கூறுவதை கேட்டிருக்கிறோம். அவரது திரைப்படம் என்றால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என முதல் நாளே புக் செய்து பார்க்கும் பழக்கம் 1980-களில் இருந்து இன்னும் இருக்கிறது.
அந்த வகையில் சிறிய குழந்தை ஒன்று ரஜினியின் படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பாட்ஷா திரைப்படம் ஒளிபரப்படுகிறது. அந்த குழந்தை தனது உறவினர் மீது அமர்ந்து கொண்டு பார்க்கிறது.
அப்போது ரகுவரன், ரஜினிகாந்த் சீன் ஓடிக் கொண்டிருக்கிறது. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டுடுவான்.... என்ற டயலாக்கையும் அதனுடன் ஒலிப்பரப்பாகும் பாட்ஷா பாட்ஷா..... என்ற பின்னணி இசையையும் கேட்டபடி குழந்தை கைதட்டி சிரிக்கிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து ரஜினிகாந்த் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் அவருக்கே உரிய பாணியில் சிரித்துவிட்டு "காட் பிளஸ் யூ, தேங்க் யூ" என தெரிவித்துள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர் பூரிப்படைந்துள்ளார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications