மெடிக்கல் எமர்ஜென்சி.. தேனாம்பேட்டை டூ கேளம்பாக்கம்.. பண்ணை வீடு செல்ல இ - பாஸ் எடுத்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனாம்பேட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனாம்பேட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார். இன்று தனது கார் பயணத்தை மேற்கொள்வதற்காக அவர் இந்த இ பாஸை வாங்கி இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் விவகாரம் தற்போது பெரிதாகி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியானது. இதனுடன் வெளியான புகைப்படங்கள் வைரலானது.

தனது லம்போகினி காரில் வீட்டில் இருந்து கேளம்பாக்கம் வரை சென்றார். இவர் மாஸ்க் அணிந்து கார் ஓட்டியது பெரிய வைரலானது.

எங்கு செல்ல

எங்கு செல்ல

இந்த நிலையில் கேளம்பாக்கம் இருப்பது செங்கல்பட்டு மாவட்டத்தில். ரஜினி சென்னையில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்குகாரில் சென்று இருக்கிறார். இதற்கு அவர் இ - பாஸ் எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இணையத்தில் அவர் இ பாஸ் எடுக்கவில்லை என்று பலர் புகார் வைத்து இருந்தனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

எத்தனை பேர்

எத்தனை பேர்

அதில் சென்னையில் மொத்தமாக 492149 பேர் அடுத்தடுத்து இ பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் பலர் பணியில் சேர வேண்டும் என்ற காரணத்தை கூறி உள்ளனர்.ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. மொத்தம் 1,61,764 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இப்போது இல்லை

இப்போது இல்லை

இதில் ரஜினிகாந்த் இ பாஸுக்கு விண்ணப்பம் செய்துள்ளாரா என்று விசாரணைக்கு பின்தான் தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் தற்போது தேனம்பாட்டையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் எடுத்து இருக்கிறார். தனது இன்னோவா காரில் செல்ல அவர் பாஸ் எடுத்துள்ளார்.

தனது கார்

தனது கார்

தேனாம்பேட்டையில் இருக்கும் ராகவேந்திரா இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் செல்ல அவர் இ பாஸ் விண்ணப்பித்து உள்ளார். இன்று தனது கார் பயணத்தை மேற்கொள்வதற்காக அவர் இந்த இ பாஸை வாங்கி இருக்கிறார். இதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்று காரணம் கூறியுள்ளார். தன்னுடன் டிரைவர் ஒருவர் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் . அவரின் இந்த இ பாஸ் வைரலாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+