நல்ல முடிவு எடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்... பாராட்டும் திருமாவளவன், சுப. வீரபாண்டியன்
ரஜினிகாந்த் நல்ல முடிவை எடுத்திருக்கிறார் பாராட்டுக்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ரஜினி வாழும் வரை நலமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார் சுப. வீரபாண்டியன்
சென்னை: கட்சி தொடங்கப்போவதில்லை என்று கூறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு ஏமாற்றத்தை தரும்; அதற்கு என்னை மன்னியுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் இறுதியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினிகாந்தும் தனது எண்ணத்தை ட்விட்டர் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார். கட்சி தொடங்குவது உறுதி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், குணமடைந்து வீடு திரும்பினார். ரஜினிகாந்த் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அறிக்கை பற்றி கருத்து கூறியுள்ள விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் திருமாவளவன், கட்சி தொடங்கப்போவதில்லை என்ற ரஜினியின் முடிவு நல்ல முடிவு என்று தெரிவித்துள்ளார். வறட்டு கவுரவம் பார்க்காமல் உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்மையை ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியதை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
#ரஜினிகாந்த் #RajinikanthPolitics வற்புறுத்தல்களுக்கு இணங்காமலும், வறட்டுக் கெளரவம் பார்க்காமலும், தன் உடல் நலத்திற்கேற்ற முடிவை எடுத்திருக்கும் திரு ரஜினி, வாழும் வரை நலமாக, மற்றவர்க்குத் துணையாக வாழ வாழ்த்திடுவோம்! pic.twitter.com/UmvGDGbiBv
— SubaVeerapandian (@Suba_Vee) December 29, 2020
திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டர் பதிவில், வற்புறுத்தல்களுக்கு இணங்காமலும், வறட்டுக் கெளரவம் பார்க்காமலும், தன் உடல் நலத்திற்கேற்ற முடிவை எடுத்திருக்கும் திரு. ரஜினி, வாழும் வரை நலமாக, மற்றவர்க்குத் துணையாக வாழ வாழ்த்திடுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications