மீண்டும் மீண்டும் கேட்ட செய்தியாளர்கள்.. அதே வார்த்தையை சொல்லி தப்பித்த ரஜினி.. ஏன் இப்படி?
நடிகர் ரஜினிகாந்த் எதை பற்றி கேள்வி கேட்டாலும் ''அதை பின்னர் அறிவிப்பேன்'' என்பதை தன்னுடைய 'டெம்ப்லேட்' பதிலாக வைத்து இருக்கிறார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் எதை பற்றி கேள்வி கேட்டாலும் அதை பின்னர் அறிவிப்பேன் என்பதை தன்னுடைய 'டெம்ப்லேட்' பதிலாக வைத்து இருக்கிறார். மிக சாதாரணமான கேள்விகளை கூட, இந்த பதிலை சொல்லி தப்பித்து விடுகிறார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் அவர் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. அவரின் ரசிகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இதில் கட்சி தொடங்குவது குறித்த முக்கிய விஷயங்களை அவர் ஆலோசனை செய்தார்.

எப்படி வழக்கம்
பொதுவாக அரசியல் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் ரஜினி பின்னர் அறிவிப்பேன் என்பதை வழக்கமான பதிலாக தெரிவிக்கிறார். முதலில அரசியலுக்கு எப்போது வருவார் என்பதையே ரஜினி, பின்னர் அறிவிப்பேன் என்றுதான் பல வருடங்களாக கூறி வந்தார். மேலே இருக்கவன் பார்த்துப்பான், நேரம் வரும் போது சொல்லுவேன், ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டார்.

அதே பதில்
2017 டிசம்பரில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கட்சி எப்போது தொடங்குவார் என்பதையும், பின்னர் அறிவிப்பேன் என்று இழுத்தடித்து வந்தார். அரசியலுக்கு வந்துவிட்டேன், ஆனால் தேதி பின்னர் அறிவிப்பேன் என்று கூறினார். அவர் பின்னர் அறிவிப்பேன் என்று கூறிய தேதி இன்று வரைவரவேயில்லை. இப்போது வரை ரஜினி எப்போது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலைதான் எழுந்துள்ளது .

கட்சி எப்போது
கட்சி எப்போது தொடங்குவேன் என்பதையே இழுத்தடிக்கும் ரஜினி கொள்கை குறித்த கேள்விக்கும் இதே பதிலைத்தான் கூறினார். ஆன்மீக அரசியலின் கொள்கை என்ன என்று கேட்டதற்கு, கொள்கையா எனக்கு தலையே சுத்திடுச்சு என்று பதில் அளித்தார். அதோடு கொள்கை குறித்து பின்னர் அறிவிப்பை வெளியிடுவேன் என்று தனது அதே ஸ்டைல் பதிலை கூறினார்.

கமல் எப்படி
அதேபோல் இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உடனான கூட்டணிக்கும் ரஜினிகாந்த் இதே பதிலைத்தான் அளித்தார். கமலுடன் இணைந்து அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதை பின்னர் முடிவு செய்வோம் என்று ரஜினிகாந்த் கூறினார். இதற்கும் கூட ரஜினி நிகழ்காலத்தில் பதில் எதுவும் சொல்லவில்லை.

இன்று எப்படி
இன்றும் கூட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். கூட்டம் நன்றாக சென்றது. அரசியல்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பு
இதையடுத்து செய்தியாளர்கள் அந்த தனிப்பட்ட விஷயம் என்னவென்று கேட்டார்கள். ஆனால் ரஜினி அதற்கு பதில் அளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே கேள்வியை பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். இதனால் எப்போதும் போல தனது டெம்ப்லேட் பதிலான, பின்னர் தெரிவிப்பேன், நேரம் வரும் போது அதை பற்றி பேசுவேன் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். ரஜினியின் இந்த பேச்சு நிறைய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications