Rajinikanth: பாஜக பக்கம் சாயும் ரஜினிகாந்த்.. கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.. விளாசும் பொன்முடி
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் நல்ல நடிகர், அரசியல் சூழ்நிலை பற்றி அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று, திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால், முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை. அரசியல் கட்சிகள் முஸ்லீம்கள் மத்தியில் பீதி கிளப்பி தூண்டி வருகிறார்கள். மதகுருக்களும் துணை போகிறார்கள். மாணவர்கள், தீர ஆராய்ந்து உங்கள் பேராசிரியர் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு போராடுங்கள். அல்லது அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்துவார்கள். போராடுகிறீர்கள். எந்த போலீஸ்காரர் எப்படி என தெரியாது. உங்கள் மீது எப்ஐஆர் போட்டால் வாழ்க்கையே போய்விடும் என்று ரஜினிகாந்த் சென்னையில் இன்று அளித்த தனது பேட்டியில் தெரிவித்தார்.

இதுகுறித்து, பொன்முடி டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா முழுக்க அனைத்து தரப்பும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது. தளபதி ஸ்டாலின் ஏற்கனவே கூறியபடி, ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகர், ஆனால், அரசியல் சூழ்நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக பக்கம் ரஜினிகாந்த் சாய்ந்து கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் முழுமையாக இந்த சட்டம் பற்றி உணர்ந்து தனது கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும். பாஜக, சங்பரிவார் அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட சட்டம் சிஏஏ. இப்படி ஒரு சட்டத்திற்கு இந்த நாட்டில் இப்போது என்ன தேவை வந்தது. இவ்வாறு பொன்முடி கேள்வி எழுப்பினார்.
தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறுகையில்- கந்துவட்டி குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், அதிலிருந்து தப்பிக்கவும், பாஜகவை திருப்திப்படுத்தவும், ரஜினிகாந்த் இப்படி பேசி வருகிறார். இந்த சட்டங்கள் குறித்து போதிய ஆழமான பார்வை அவருக்கு இல்லை. தெரிந்த விஷயத்தை பேச வேண்டும், தெரியாத விஷயத்தை பேசாமல் இருப்பதுதான் அவருக்கு மரியாதை என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications