ரஜினிக்கு அடிவயிற்றில் வீக்கம்! சிறுநீரக நரம்பில் சதை! ஸ்டன்ட் பொருத்திய மருத்துவர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு அடிவயிறு சற்று வீக்கமாகி வலியும் இருந்ததாக தெரிகிறது. அவருக்கு சிறுநீரக மாற்று அறவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மருத்துவ ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அவர் தனது 171 ஆவது படமான கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் கூலி ஷூட்டிங் நடந்தது.

அதில் சில போர்ஷன்களை முடித்துவிட்டு செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை திரும்பினார். கடந்த 10 நாட்களாகவே சிறுநீர் கழிப்பதில் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டதாக தெரிகிறது. அடிவயிறும் லேசாக வீங்கி வலியையும் கொடுத்து வந்தது.
அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவ்வப்போது மருத்துவ ஆலோசனைகளை பெற்று வந்தார். ஷூட்டிங்கில் இருந்த போதும் அவருக்கு அடிவயிற்று வலி இருந்தது. இதனால் மருத்துவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் சொன்ன மருந்தை உட்கொண்டிருக்கிறார்.
சில முக்கிய பரிசோதனைகளையும் அவர் செய்ததாக தெரிகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்து பிறகுதான் அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவ கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி லதா உடனிருக்கிறார்.
அவருக்கு ஏற்கெனவே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடி வயிற்றில் ரஜினிக்கு வலி இருப்பதாலும் சிறுநீர் கழிக்கும் போது பிரச்சினை இருப்பதாலும் அவரது சிறுநீரக செயல்பாட்டை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். அப்போதுதான் ரஜினியின் சிறுநீரகத்துடன் தொடர்புடைய நரம்பில் சிறிய சதை வளர்ந்திருப்பது தெரியவந்தது.
இதை அகற்றுவதற்காகத்தான் அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இதய சிகிச்சை நிபுணர், நரம்பியல் துறை நிபுணர்கள் சிகிச்சை கொடுத்து வருகிறார்கள். சிறுநீரகத்தில் உள்ள அந்த சதை வளர்ச்சியை சரி செய்ய ஸ்டன்ட் வைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.
அவரது தொடையில் இந்த ஸ்டன்ட் வைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று முடிந்தது. ரஜினிகாந்த் தற்போது நலமாக இருக்கிறார், கண்களை திறந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவருடைய குடும்பத்தினருடன் பேசினார். பிறகு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஸ்டன்ட் என்பது ஒரு சிறிய குழாய் போன்று இருக்கும். இதயத்திற்கு ரத்தம் வழங்கும் ரத்த நாளங்களுக்கு சிகிச்சை அளிப்பதை போல் நரம்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும் இந்த ஸ்டன்ட் வைக்கப்படுகிறது. எனவே ஸ்டன்ட் என்றதும் அவருக்கு இதயத்தில் ஏதோ பிரச்சினை என நினைத்துவிட வேண்டாம். அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே கூலி படத்தின் படப்பிடிப்பை தள்ளி போகும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது போன்ற ஸ்டன்ட் நடிகர் அஜித்துக்கு கூட மூளையில் அறுவை சிகிச்சை செய்து வைக்கப்பட்டது. அது போல்தான் ரஜினிக்கும் தொடையில் வைக்கப்பட்டுள்ள ஸ்டன்ட் அவருடைய சிறுநீரக சிறுகுழாயுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications