ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து
தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் ஆனால் நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசியலில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் ஆனால் நடிகர் அஜித் கண்ணியமானவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் உலகிற்கும் சினிமா நடிகர்களுக்கும் தற்போது பிரச்சனை எழ தொடங்கி உள்ளது. தான் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம் செய்தார். இதனால் அதிமுக மற்றும் ரஜினிக்கு இடையில் சண்டை வந்தது.
இதில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார். அதோடு ரஜினியோடு இணைந்து அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் செய்ய தயார் என்றும் குறிப்பிட்டார்.

வழி விட வேண்டும்
அதேபோல் நடிகர் ரஜினியும், கமலும் தமிழகத்தை ஆண்ட பின் விஜய்க்கு வழி விட வேண்டும் என்று விஜயின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் குறிப்பிட்டார். இதனால் தற்போது அதிமுகவினர் விஜய், ரஜினி, கமல் மூன்று பேரையும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் கடுமையான வார்த்தை போர் நிகழ்ந்து வருகிறது.

அரசியல் பிரச்சனை
இந்த நிலையில் இந்த அரசியல் பிரச்சனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். அவர்கள் எல்லோரும் கானல் நீர் போன்றவர்கள்.

அஜித் எப்படி
அவர்கள் இன்னும் சில நாட்களில் காணாமல் போவார்கள் அவர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். அவர்களை நம்பி பின்னால் செல்லும் இளைஞர்கள் ஏமாற்றம் அடைவார்கள். நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர். அவர் நேர்மையான நடிகர்.

அதிமுக ஆட்சி
அதிமுகதான் தமிழகத்தை நிலையாக ஆள போகிறது. எவ்வளவு பேர் சேர்ந்து வந்தாலும். எத்தனை நடிகர்கள் வந்தாலும் அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். தொடர்ந்து அதிமுக நிலையான ஆட்சியை கொடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications