"சூப்பர் ஸ்டார்" இல்லை.. விண்ணை பிளந்த ரசிகர்களின் கோஷம்.. ரஜினியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்தான் சூப்பர்தான் என்றும் ரஜினி காந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்றும் ஒரு கருத்து நிலவி வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை புதிய அடைமொழியுடன் ரசிகர்கள் அழைத்த போது ரஜினிகாந் ரியாக்ஷன் என்ன தெரியுமா

சூப்பர் ஸ்டார்னு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்... என பாடலை 1990 களில் பிரபலம். இதை கேட்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பாடலுக்கு பள்ளி ஆண்டுவிழாவில் நடனமாடாதவர்களும் இருக்க மாட்டார்கள்.

அதிலும் ரஜினி ஸ்டைலை வரவழைக்க நம்ம 80, 90 கிட்ஸ்கள்பட்ட பாடு இருக்கே அப்பப்பா!.. அது போல் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சந்திரன்.. ஒரே ஒரு பாட்ஷாதான் இந்த ஊருக்கெல்லாம் என்ற பாடல் உண்டு.

பாடல்

பாடல்

இந்த பாடலை அப்படியே மாற்றும் ரசிகர்கள்.. ஒரே ஒரு சந்திரன், ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என முழங்கிய 50 ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில்தான் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு புயலை கிளப்பும் செய்தியை சொல்லிவிட்டார்.

 விஜய்தான் சூப்பர் ஸ்டார்

விஜய்தான் சூப்பர் ஸ்டார்

அதாவது விஜய்தான் சூப்பர் ஸ்டார். அவருக்கு அடுத்த இடத்தில் அஜித் இருக்கிறார் என சொல்லிவிட்டார். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. மேலும் சினிமா விமர்சகரான பிஸ்மி ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொன்னது சரிதான். விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என கூறிவிட்டார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

இதனால் ரஜினி ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகத்திற்கு சென்று அவருடன் வாக்குவாதம் செய்தார்கள். அதிலிருந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனும் ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரென்டாக்கினர். அது போல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், தம்பி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டிருந்தார்.

தில் ராஜு

தில் ராஜு

தில் ராஜு விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறியிருந்ததற்கு நடிகர் விஜய்யும் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால் தினம் தினம் விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ட்விட்டரில் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

ரஜினியை பார்த்து ஆரவாரம்

ரஜினியை பார்த்து ஆரவாரம்

அப்போது அவரை காண ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ரஜினியை பார்த்து ஆரவாரத்துடன் தலைவா தலைவா என அழைத்தனர். ரஜினியும் கையசைத்து சிரித்தார். இதன் பிறகு ரசிகர்கள் சிலர் தமிழகத்தின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என முழங்கினர். இதை கேட்டதும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+