திடீர் ட்விஸ்ட்.. விஜயகாந்த்தை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. பின்னணி என்ன?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலையொட்டி, தமிழக தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவும், பாமகவும் இணைந்த நிலையில் தேமுதிக இன்னும் முடிவெடுக்கவில்லை.

இதற்கிடையே, திடீர் திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேற்று திடீரென அவர் இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை அழைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயகாந்தை , நடிகர் ரஜினிகாந்த் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று சந்தித்தார். காலை 11.30 மணியளவில், விஜயகாந்த் இல்லத்திற்கு காரில் ரஜினிகாந்த் வருகை தந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சாலிக்கிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.@rajinikanth pic.twitter.com/pyKm05SfFc
— Vijayakant (@iVijayakant) February 22, 2019
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பி வந்துள்ள விஜயகாந்த்தின் உடல்நிலைக் குறித்து ரஜினிகாந்த் விசாரிக்கவே இந்த விசிட் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இல்லாத திருப்பமாக இன்று விஜயகாந்த்தை ரஜினிகாந்த் சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடவில்லை என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த்தை சந்திப்பது முக்கியத்துவம் பெறுகிறது. பாஜக கூட்டணிக்கு விஜயகாந்த் செல்ல வேண்டும் என தனது நண்பரான விஜயகாந்த்திடம், ரஜினிகாந்த் வற்புறுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பும் பாஜக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
விஜயகாந்த்துடனான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. பிறகு நிருபர்களை சந்தித்த, ரஜினிகாந்த், தனது சந்திப்பில் துளியும் அரசியல் இல்லை என்றும், அமெரிக்காவில் இருக்கும் போதே விஜயகாந்தை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அங்கு சந்திக்க முடியவில்லை. ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது என்னை பார்க்க வந்த முதல் ஆள் கேப்டன் தான். இப்போது சிகிச்சை முடிந்து, அமெரிக்காவிலிருந்து நல்ல ஆரோக்கியத்துடன் வந்துள்ளார். அவரை இப்படி பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications