சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாஜ்பாய்க்கு பிறகு மோடிதான் செல்வாக்குமிக்க தலைவர்- ரஜினி ஆஹா ஓஹோ பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: வாஜ்பாய்க்கு பிறகு மோடிதான் செல்வாக்கு மிக்க தலைவர் என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ரஜினிகாந்த் முதல்முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்கிற தனிமனித தலைமைக்கு கிடைத்த வெற்றி.

வாஜ்பாய்க்கு பிறகு செல்வாக்கு மிக்க தலைவராக மோடி திகழ்கிறார். நேரு, இந்திரா, ராஜீவ்காந்திக்கு பிறகு மோடி சிறந்த முறையில் திகழ்கிறார். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது.

முதலிரவுல கையை பிடிச்ச உடனே மயங்கிட்டியே அதை சொன்னியா கல்பனா? முதலிரவுல கையை பிடிச்ச உடனே மயங்கிட்டியே அதை சொன்னியா கல்பனா?

பதவியேற்பு விழா

பதவியேற்பு விழா

இதனால்தான் தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தது. வரும் 30-ஆம்தேதி பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்கிறேன் என்றார் ரஜினிகாந்த்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து மோடிக்கு ரஜினி காந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மக்களவை தேர்தலில் நீங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளீர்கள். எனது மனபூர்வமான வாழ்த்துகள். உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறியிருந்தார்.

மோடி

மோடி

இதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவிக்க செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் அனைத்து கட்சிகளும் இணைந்து மோடியை எதிர்க்கின்றனவே அது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டனர்.

மறைமுகமாக மோடிக்கு ஆதரவு

மறைமுகமாக மோடிக்கு ஆதரவு

அதற்கு ரஜினிகாந்தோ 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என செய்தியாளர்களை கேள்வி எழுப்பி மோடிதான் பலசாலி என மறைமுகமாக ரஜினி கூறியிருந்தார். பின்னர் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என ரஜினி கூறியதும், உடனே தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பு குறித்த திட்டத்தை பாஜக கொண்டு வந்ததும் அனைவரும் அறிந்ததே.

English summary
Rajinikanth praises Modi is the infleunced person after Nehry, Indira, Rajiv Gandhi and Vajpayee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X