Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரவாதிகள் வாராங்க.. கையெடுத்து கும்பிட்டு ரஜினிகாந்த் வீடியோ! கடலோர மக்களுக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷத்தை கெடுக்க கடல் வழியாக பயங்கரவாதிகள் நாட்டுக்குள் புகுந்து கோர சம்பவங்கள் செய்வார்கள். இதனால் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்க வேண்டும். இதுதொடர்பாக கடலோர கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் சிஐஎஸ்ஃப் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டு முக்கிய வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் தான் திடீரென்று நடிகர் ரஜினிகாந்த் தான் பேசும் முக்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கடல் வழியாக பயங்கரவாதிகள் நுழைவதாகவும், அதனை தடுக்கும் வகையில் கடலோர மக்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார். அதோடு உங்கள் ஏரியாவுக்கு வரும் சிஐஎஸ்எஃப் வீரர்களை வரவேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

rajinikanth-releases-video-saying-terrorists-will-come-via-sea-so-people-should-support-cisf

ரஜினிகாந்த் திடீர் வீடியோ

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கையெடுத்து கும்பிட்டபடி வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:, ‛‛அனைவருக்கும் வணக்கம். நம் நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதனை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் புகுந்து கோரசம்பவங்கள் செய்வார்கள். அதற்கு உதாரணம் மும்பையில் 26/11ல் நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கிடுச்சு. கடலோரம் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் நடமாடினால் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.

இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 100 சிஐஎஸ்எஃப் வீரர்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை பேரணி செல்கின்றனர். அவர்கள் உங்களின் ஏரியா வரும்போது வரவேற்று முடிந்தால் அவர்களுடன் கொஞ்சம் தூரம் சென்று வாருங்கள். நன்றி'' என்று கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் என்ன நடந்தது?

நடிகர் ரஜினிகாந்த் வீடியோவில் குறிப்பிட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் என்பது மிகவும் கொடூரமானது. அதாவது கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. படகு வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் 10 பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். மும்பை தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையம், நாரிமண் ஹவுசில் உள்ள யூத மையம் மற்றும் லியோபோல்ட் கஃபே உள்பட பல இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த கோர தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். மேலும் 300 பேர் காயமடைந்தனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முயன்ற முகமது அஜ்மல் அமீர் கசாப் கைது செய்யப்பட்டார். அவர்2010ல் தூக்கிலிடப்பட்டார். இப்படி கடல் வழியாக பயங்கரவாதிகள் நுழைந்து நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யபப்ட்டுள்ளது.

வீடியோவின் பின்னணி

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த வீடியோவின் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் Great Indian coastal Cyclothon என்ற பெயரில் முதல் முறையாக மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரையில் இருந்து நாடு முழுவதும் வலம் வருகின்றனர். 56வது சிஐஎஸ்எஃப் ஆண்டு விழாவையொட்டி வீரர்கள் சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளனர். மார்ச் 7 ம் தேதி ராணிப்பேட்டை தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் இருந்தபடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு 14 பெண்கள் உள்பட மொத்தம் 125 சிஐஎஸ்எஃப் பிரிவை சேர்ந்தவர்கள் 2 பிரிவாக கடலோர பகுதியின் வழியாக சைக்கிளில் கன்னியாகுமரி வருகின்றனர். அதன்படி மேற்கு வங்க மாநிலம் பக்காலியில் இருந்து சைக்கிளில் சென்னை, புதுச்சேரி வழியாகவும், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவிடத்துக்கு வருகின்றனர். அதேபோல் மேற்கு கடலோர பகுதியான குஜராத்தின் லக்பட்டில் இருந்து சூரத், மும்பை, கோவா, கொச்சி வழியாக கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவிடத்துக்கு வருகின்றனர்.

25 நாளில் 6,553 கிமீ

மொத்தம் 25 நாட்களில் 6,553 கிலோமீட்டர் தொலைவை அவர்கள் சைக்கிளில் கடந்து பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்நிலையில் தான் தங்கள் கிராமத்துக்கு வரும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+