கட்சி துவங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
Recommended Video

சென்னை: கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்தார்.
'பேட்ட' திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது: பேட்ட என்பது முழு பொழுதுபோக்கு திரைப்படம். டிசம்பரில் கட்சி அறிவிப்பு வெளியாகாது. கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராக உள்ளது. நேரம், காலம் பார்த்து, நான் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறேன்.
நாடாளுமன்ற தேர்தல், அறிவிக்கும்போது எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், பேட்ட திரைப்படத்திலிருந்து ஒரு டயலாக்கை சொல்லி காட்டுமாறு நிருபர் ஒருவர் கூற, அதற்கு 'பேட்ட பராக்' என கூறி கிளம்பினார் ரஜினிகாந்த்.
முன்னதாக நேற்று வெளியிட்ட ட்வீட்டில், திட்டமிட்டதைவிட 16 நாட்கள் முன்பாக பேட்ட சூட்டிங் நிறைவு பெற்றுவிட்டதாகவும், இதற்காக தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் உட்பட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.O திரைப்படமும், பேட்ட திரைப்படமும் ரிலீஸ் ஆன பிறகு ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications