இப்போதுதான் தான் எனக்கே தெரியும் - ரஜினிகாந்த் அறிவிப்பு குறித்து சகோதரர் சத்யநாராயணா அதிர்ச்சி

ரஜினியின் அரசியல் வருகையை ரசிகர்கள் மறப்பது கடினம். இந்த செய்தி இப்போது தான் எனக்கே தெரியும். ரஜினியின் இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் உடல்நிலை தான் முக்கியம் என்று அவரது அண்ணன் சத்யநாராயணா கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை ரசிகர்கள் மறப்பது கடினம். இந்த செய்தி இப்போது தான் எனக்கே தெரியும். ரஜினியின் இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அது குறித்த முக்கிய அறிவிப்பை டிச.31ம் தேதி வெளியிடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். அவரது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமித்திருந்தார்.

டிசம்பர் 31ல் ரஜினி என்ன அறிவிக்கப் போகிறார்? என அவரது ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்றத்தினரும் ஆரவாரமாக காத்துக் கிடந்தனர். கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், தனது பிறந்தநாளுக்கு முன்பு பெங்களூரு சென்று தனது சகோதரர் சத்ய நாராயணாவிடம் ஆசி பெற்றார். இத்தகைய சூழலில் தான், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

ரஜினி திடீர் அறிவிப்பு

ரஜினி திடீர் அறிவிப்பு

31ஆம் தேதி ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்ககள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்யநாராயணா அதிர்ச்சி

சத்யநாராயணா அதிர்ச்சி

ரஜினிகாந்தின் அரசியல் பயணம் தடைப்பட்டது குறித்து அவரது சகோதரர் சத்ய நாராயணா வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ரஜினியின் உடல்நிலை தான் முக்கியம். கட்சி தொடங்குவது குறித்து என்னிடம் பேசினார். ரஜினியின் அரசியல் வருகையை ரசிகர்கள் மறப்பது கடினம். இந்த செய்தி இப்போது தான் எனக்கே தெரியும். ரஜினியின் இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் பேட்டியளித்திருந்த சத்யநாராயணா, கொரோனாவுக்கு முன், அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார். கொரோனா காலம் என்பதால் எனது தம்பியின் உடல்நலனே முக்கியம். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இருப்பது அவசியம். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து இரண்டு மாதங்களில் தெரியவரும் என்று தெரிவித்திருந்தார்.

யாகம் செய்த சத்யநாராயாணா

யாகம் செய்த சத்யநாராயாணா

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும் டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் அண்ணன் சத்தியநாராயணா, அவரது மகன் ராமகிருஷ்ணன் மற்றும் மருமகள் கீதாபாய் ஆகியோர் மிருத்யுஞ்சய யாகம் நடத்தி வழிபட்டனர். அப்போது பேட்டியளித்த சத்யநாராயாணா, டிசம்பர் 31ஆம் தேதி தனது கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.

கடைசி காலம்

கடைசி காலம்


ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். திராவிட கட்சிகளுக்கு கடைசி காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள், ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார் சத்யநாராயாணா.

சத்யநாராயணா அதிர்ச்சி

சத்யநாராயணா அதிர்ச்சி

எல்லா மதத்தினரும் ஒன்று தான். எல்லா மக்களும் ஒன்று தான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என்று கூறியிருந்தார் சத்யநாராயணா. உடல் நிலையை காரணம் காட்டி இனி அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்பு அண்ணன் சத்யாநாராயணாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்றே கூற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+