பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல' .. செம்ம ரியாக்சன்
சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ளதை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். ட்விட்டர் முழுவதும் ரஜினி ரசிர்களின் ஹேஷ்டேக்குகள் நிரம்பி வழிகின்றன. #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் என்று ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் பலர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Recommended Video
ரஜினிகாந்த் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தி 2021 ஜனவரி முதல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி சந்தோஷத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ரஜினி அரசியல் வருகை குறித்து வெளியிட்ட ஹேஷ்டேக்குகளும் கருத்துக்களுமே பேஸ்புக் மற்றும் ட்விட்டரை ஆக்கிரமித்துளளது. அவரது ரசிர்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துக்களை இப்போது பார்ப்போம்.

ரஜினி ரசிகர்
'பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல ...' ரஜினி குரு என்பவர் வெளியிட்ட ட்வீதில்,. "பேட்ட ஆட்கள் இல்லாத தெருவும் இல்ல.. கோட்டையை பிடிக்கிற நாட்கள் தொலைவிலும் இல்ல.. என்று கூறியுள்ளார்.

ஸ்கிரீனிங் அவசியம்
மீனா என்பவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், ஆன்மீகம் நிச்சயம் வெல்லும்.. தேர்தலுக்கு முன்பே ரஜினி மக்கள் மன்றத்தில் பதிவு செய்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை தரவேண்டும்.. ஒரு வியூகம் அமைத்து பிரசாரம் செய்ய வேண்டும். கட்சியில் சேருபவர்களுக்கு ஸ்கிரீனிங் அவசியம்.. உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு கடவுளை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

புலி வருது
திரைப்படஇயக்குனர் லிங்குசாமி புலி வருது .. புலி வருதுனு சொன்னாங்க .. ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு. வாழ்த்துக்கள் சார்.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று ரஜினியின் ட்விட்டை குறீப்பிட்டு கூறியுள்ளார்.

அதிமுக ஓட்டு பிரியும்
மணிவண்ணன் என்பவர் வெளியட்டிருந்த பதிவில், அரசியலுக்கு ரஜினி வந்தால், அதிமுக ஓட்டை பிரிப்பது உறுதி... ரஜினியை வெச்சு திமுக க்கு ஸ்கெட்ச் னு நினைச்ச அது அவங்களுக்கு தான் பின்னால் பிரச்சனை வரும். இப்ப அது அவங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

ரஜினி அரசியல்
அருண்குமார் வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், ரஜினி பாஜகவின் பி டீம் என்று விமர்சித்துள்ளார். திமுக மற்றும் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கவே களம் இறங்குவதாகவும் விமர்சித்துள்ளார். ரஜினியால் எதையும் மாற்ற முடியாது என்றும், அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும், மக்கள் முன்பு வந்து மக்களுக்காக பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
-
ரஜினி பற்றி ஆதவ் சொன்ன கருத்து.. லதா ரஜினிகாந்த் கொடுத்த தக் லைஃப் பதில்.. குவியும் கமெண்ட்ஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications