கண்ணா கேட்டு மட்டும் வேற வேற.. ஆனால் ஸ்டைலு.. அதேதான்.. இதெப்படி இருக்கு!
சென்னை: பேட்ட பர்ஸ்ட் லுக், டிரெய்லர் ரிலீஸானது. ஆஹா 90களில் பார்த்த ரஜினியை கண் முன் கொண்டு வந்த கார்த்திக் சுப்புராஜையும் மேக்கப் கலைஞரையும் ரசிகர்கள் பாராட்டாமல் இருக்கவில்லை.
பேட்ட திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அந்த படத்தில் ரஜினி ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசி பாராட்டினார். அப்போது இந்த படம் ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதனால் படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு முன் ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரெய்லர்
இந்நிலையில் 90களில் பார்த்தது போல் ரஜினி யங்காக இருப்பதால் ரசிகர்கள் பேட்ட பொங்கல் என்றே கொண்டாடி மகிழ்கின்றனர். நேற்றைய தினம் படத்தின் டிரெய்லர் வெளியானது.

சண்டை காட்சிகள்
அந்த டிரெய்லரை வைத்து பார்க்கும் போது ரஜினி ஏதோ ஒரு ஹாஸ்டலின் வார்டனாக நடிக்கிறார் என்பது தெரிகிறது. சண்டை காட்சிகளும் நன்றாக வந்துள்ளது. இந்நிலையில் அந்த டிரெய்லரில் ரஜினிகாந்த் ஒரு கேட்டை திறக்கும் காட்சிகள் வந்தன. இதை அப்படியே பிடித்து அபூர்வ ராகங்களுக்கே சென்றுவிட்டனர்.

கேட் திறக்கும் காட்சி
அந்த படத்தில் ரஜினி கோட் சூட் போட்டுக் கொண்டு ஒரு கேட்டை கைகளால் திறப்பது போன்ற காட்சி இருக்கும். அதுபோல் தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனுவாசனின் நிறுவனத்துக்கு ரஜினி செல்வார். அப்போது அங்குள்ள ஸ்லைடிங் கேட்டை காலால் உதைத்து ஸ்டைலாக திறப்பார். பேட்ட படத்திலும் கதவை திறக்கு்ம காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
|
ரசிகர்கள்
இந்த படக் காட்சிகளுடன் வைத்து ரசிகர்கள் ஒரு வீடியோ தொகுப்பை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முதலில் அபூர்வ ராகங்கள், அடுத்து தில்லுமுல்லு, கடைசியாக பேட்ட. இதை ஷேர் செய்து 2.0வை காட்டிலும் அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications