பார்க்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த... ஆஹா ரஜினி ஆட்டம் பலமா இருக்கும் போலயே!
Recommended Video

சென்னை: ரஜினி என்றாலே பஞ்ச் வசனத்துக்கு பஞ்சம் இருக்காது. அது அனல் பறக்கும் வசனங்களாக இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அந்த வகையில் பேட்ட திரைப்படத்தில் வெளியான ஒரு பாடலில் ரஜினி பஞ்ச் டயலாக் பேசியுள்ளார். அதாவது பார்க்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த... என்கிறார்.
சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு ரிலிசாகிறது.
இந்த படத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடலை படக் குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் பார்க்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த என்ற பஞ்ச் டயலாக்கை பேசுகிறார்.

ரசிகர்கள்
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முன்பு வெளியான படங்களில் இதுபோன்பஞ்ச்களை பேசியிருந்தால் சாதாரணமாக எடுத்துக் கொண ரசித்து விட்டு செல்லலாம். ஆனால் காலா, 2.ஓ, பேட்ட ஆகிய படங்களில் இவர் பேசிய வசனங்களை ரசிகர்கள் அரசியலோடு தொடர்புபடுத்தி வருகின்றனர். ரஜினியும் அரசியலுக்கு வரபோவதாக அறிவித்துள்ளார். ஆனால் எப்போது என்பதை அவர் இன்னும் அறிவிக்கவில்லை.

வர்ணம்
காலா படத்தில் ஏழை மக்கள் காலம் காலமாக தங்கியிருக்கும் இடத்தை ஆட்டைய போடும் வில்லன்களிடம் இருந்து அந்த இடத்தை மீட்கும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டி வருவார். காலா கருப்பு உழைப்பாளிகளின் வர்ணம் என்பார்.

தெறிக்க விடும்
அதுபோல் பேட்ட படத்தில் பார்க்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த.. என்ற பஞ்ச் வசனம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்னும் ஓரிரு வாரங்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற செய்திகளுடன் இந்த பஞ்ச்சை தொடர்புபடுத்தி பார்க்கும் போது மரண மாஸாக உள்ளது. இதை கேட்கும் போது எதிரிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதாகவே கருதப்படுகிறது.

பஞ்ச்களின் தொகுப்பு
மேற்கண்ட செய்திகளை அறிந்த ரசிகர்கள் அரசியலுக்கு ஏற்றாற்போல் உள்ள வசனங்களை தொகுத்து வருகின்றனர். பாட்ஷா படத்தில் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி, அருணாசலத்தில் ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான், நான் எப்ப வருவேன் எப்டி வருவேனு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன், படையப்பாவில் என் வழி தனி வழி, சிவாஜி படத்தில் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல, லிங்கா படத்தில் உள்ள நான் எந்த வேலையா இருந்தாலும் மனசுக்கு புடிச்சாதான் செய்வேன் உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு ரவுண்ட் வருகின்றன.












Click it and Unblock the Notifications