ரஜினி வந்தால் எல்லாம் மாறும்.. சசிகலாவிற்கு சாதகமாகும் அரசியல் சூழ்நிலை.. அடுத்தடுத்த திட்டம் ரெடி!
நடிகர் ரஜினிகாந்த் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்கினால் சசிகலாவிற்கு அது சாதகமாக முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்கினால் சசிகலாவிற்கு அது சாதகமாக முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறையில் இருக்கும் சசிகலா எப்போது ரீலிஸ் ஆவார் என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. அதிமுக கட்சிக்கு உள்ளேயே பலர் இதை கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
அவர் நன்னடத்தை விதிமுறைகளை பயன்படுத்தி வெளியே வருவார் என்று கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன செய்வார்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்போது அவர் சிறை சென்று இரண்டு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும்.

ஆனால் என்ன
ஆனால் தண்டனையை முழுதாக அனுபவிக்கும் முன் அவர் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். சசிகலா இன்னும் சில நாட்களில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த உள்ளார். இதனால் பெரும்பாலும் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இந்த வருட இறுதிக்குள் வெளியே வருவார் என்கிறார்கள்.

ரஜினிகாந்த்
சரியாக சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் போது நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகலாவை சந்தித்த அமமுக உறுப்பினர்கள் சிலரும், ரஜினி கட்சி தொடங்க போகிறார் என்று தெரிவித்துள்ளார். அதோடு ரஜினியும் அதிமுகவும் கூட்டணி வைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

கனவு
ரஜினியும் அதிமுகவும் கூட்டணி வைத்தால் தனக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் என்று சசிகலா நம்புகிறார். ரஜினி மூலம் மீண்டும் அதிமுகவிற்குள் செல்ல முடியும் என்று சசிகலாவிற்கு அமமுகவினர் நம்பிக்கை அளித்துள்ளார். ரஜினி கட்சி தொடங்கினால் அதிமுவினர் சிலர் அந்த கட்சிக்கு மாறுவார்கள். அப்போது அதிமுகவில் வெறுமை உண்டாகும்.

முக்கிய மாற்றம்
முக்கியமான தலைவர்கள் சிலர் ரஜினியின் கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது. தேர்தல் தோல்வி காரணமாக அதிமுக கட்சிக்குள் ஏற்கனவே நிறைய பிரச்சனைகள் நிலவுகிறது. இப்போது வெளியே வந்தால் அது தனது சாதகமாக முடியும். இரட்டை தலைமை பிரச்சனை தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

வெறுமை
அதை பயன்படுத்தி மீண்டும் அதிமுகவிற்குள் செல்ல முடியும். இப்போதும் இரட்டை இலைக்கு உள்ள வாக்கு சதவிகிதம் அப்படியேதான் இருக்கிறது. அதனால் சசிகலா வந்தால் கட்சி இன்னும் பலமடையும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உங்களுக்கு கிரீன் சிக்னல் கொடுப்பார் என்று சசிகலாவிற்கு நம்பிக்கை அளித்துள்ளனர். இதனால் சசிகலா விடுதலை ஆவதில் தற்போது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications