தேர்தலில் போட்டியில்லை... அப்போ, ரஜினியின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்... கமல்ஹாசன் பதில்
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக என ஒரு கட்சியையும் விடாமல் கடுமையாக சாடினார் கமல்ஹாசன்.
முதன்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள மக்கள் நீதி மய்யம், கூட்டணி இல்லாமல் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

3 வது அணி உருவாகும்?
அப்போது, யாருடன் கூட்டணி சேர்ந்தால் பணம் வரும், யாருடன் சேர்ந்தால் ஓட்டு வரும் என எடை போடுபவர்கள் நாங்கள் அல்ல எங்கள் பலம் மக்கள் தான் என்றார். மக்கள் நலன் கருதி உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். தன்னுடன் நேர்மையானவர்கள் இணையலாம் என அழைப்பு விடுத்தேனே தவிர, தமிழகத்தில் 3 வது அணி உருவாகும் என நான் கூறவில்லை.

ரஜினியின் ஆதரவு
இதுவரை நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி என்பது தான் முடிவாக உள்ளது என்ற அவர், ரஜினியின் ஆதரவு தனக்கு இருக்கும் என நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆதரவு என்பது கேட்டு பெறுவது அல்ல அவர்களாகவே கொடுப்பது என்றும் தேர்தலுக்கான மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நாளை விருப்ப மனு பெறவிருப்பதாகவும் தெரிவித்தார்.

கவர்ச்சியான தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கை என்ற கவர்ச்சி எங்களுக்கு முக்கியம் இல்லை. மக்கள் நலன் தான் முக்கியம் என்றும், எங்களால் எது செய்ய முடியுமோ அதைத்தான் சொல்வோம் எனவும் பேசினார். பிரதமரின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி கட்டாயம் அவர் வந்தே ஆக வேண்டும், கஜா புயல் பாதிப்பின் போது ஏன் பிரதமர் மோடி வரவில்லை என கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என்றார்.

தண்ணீர் பிரச்சனை
அரசியலையும், என்னையும் ஒன்றாக பார்பதால், நான் பேசுவது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைக்கு சினிமா வசனம் போல் தெரிகிறது என்று பதிலளித்தார். அதே போல், தண்ணீர் பிரச்னை தீர்ப்பவர்களுக்கு எனது ஆதரவு என்றால், ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான 'நமது அம்மா' இதழில் சூசகமாக கட்டுரை எழுதபட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு , அவர்கள் எந்த தண்ணீர் பிரச்சனையை சொல்கிறார்கள் என தெரியவில்லை என கிண்டலாக பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications