சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி-வீடியோ

    சென்னை: எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என ரஜினிகாந்த் கமலுக்கு நாசுக்காக பதில் அளித்துவிட்டார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் சூறாவளி பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

    ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என கமலிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார்.

    Rajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா? Rajinikanth: நல்ல அறிக்கை.. பாஜகவை புகழ்ந்த ரஜினிகாந்த்.. தேர்தலில் மறைமுக ஆதரவு அளிக்கிறாரா?

    பிரசாரம்

    பிரசாரம்

    எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான் என கமல் தெரிவித்திருந்தார்.

    விமர்சனங்கள்

    விமர்சனங்கள்

    மேலும் கமலுக்கு எந்த பதிலையும் சொல்லாமல் ரஜினி இருந்ததால் ரசிகர்களை போல் கமலையும் காக்க வைக்கிறார் ரஜினி என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

    ஆதரவு

    ஆதரவு

    கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் கூறுகையில் வருகிறேன் என்றார் ரஜினி. ஆனால் இன்னும் வரவில்லை. என்னை ஆதரிப்பதை ரஜினிகாந்த் தான் வெளிப்படுத்த வேண்டும். நான் திரும்ப திரும்ப கேட்கக்கூடாது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    ரஜினியை என் பாதி வயதில் தான் தெரியும். ஆனால் மக்களை 4 வயதிலிருந்தே தெரியும். மக்கள் வருகிறார்கள் அதுபோதும். யார் ஆதரித்தாலும் மகிழ்ச்சி. ரஜினி ஆதரவளித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

    மாற்றம் இல்லை

    மாற்றம் இல்லை

    இந்த நிலையில் ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, நான் ஏற்கெனவே அதை கூறிவிட்டேன் என்றார்.

    நதிகள் இணைப்பு

    நதிகள் இணைப்பு

    மக்களவை தேர்தலில் கமலுக்கு ஆதரவு தருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள். பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக்க தனி ஆணையம் என்ற வாக்குறுதியை வரவேற்கிறேன்.

    வாஜ்பாயிடம் பகீரத்

    வாஜ்பாயிடம் பகீரத்

    மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். நதிகளை இணைத்தால் நாட்டில் உள்ள வறுமை போய்விடும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். நதிகள் இணைப்பு திட்டத்துக்கு வாஜ்பாயிடம் பகீரத் என பெயர் வைக்குமாறு கூறினேன். பகீரத் என்றால் சாதிக்க முடியாததை சாதிக்க முடியும் என அர்த்தம் என்றார் ரஜினி.

    English summary
    Rajinikanth says that pl dont spoil frienship between me and Kamal Haasan by asking about my support to his party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X