சர்கார் மட்டுமா.. இலவசம் வேண்டாம் என்று ரஜினிகாந்த்தும் சொல்லியாச்சு.. வைரலாகும் வீடியோ
Recommended Video

சென்னை: இலவசம் வேண்டாம் என்று, விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இலவசமாக அரசு கொடுத்த பொருட்களை தீயில் போட்டு எரிப்பது போன்ற காட்சிகளும் படத்தில் உள்ளது.
மக்கள் எப்படி இலவச பொருட்களை தூர எறிவார்கள், இதனால் பெண்கள் கொந்தளிப்பார்கள் என்று, அதிமுகவின் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, அன்பழகன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், இலவசமாக அரசியல்வாதிகள் கொடுக்கும், பொருட்களை வாங்காதீர்கள் என்று ரஜினிகாந்த் தனது திரைப்படம் ஒன்றில் கூறியுள்ள காட்சி வைரலாகியுள்ளது.
[பணமதிப்பிழப்பை புகழ்ந்த ரஜினி, கமல்... தில்லாக எதிர்த்த தளபதி விஜய்! #Demonetisation ]
1993ம் ஆண்டில் வெளியான 'வள்ளி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, காட்சியொன்றில், வேட்டி, சேலைகளை அரசியல்வாதிகள் இலவசமாக அளிக்கும்போது ரஜினி கதாப்பாத்திரம் அங்கே செல்வது போலவும், "நாம என்ன பிச்சைக்காரங்களா.. சேல, வேட்டி வாங்குறதுக்கு.. வேல வெட்டி கேளுங்கய்யா.. வேல வெட்டி கிடைச்சா, சேல வேட்டி நாமே வாங்கிக்களாம்" என்று அக்கதாப்பாத்திரம் கூறுவதை போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த வேட்டி, சேலைகளை மக்கள் தூக்கி எறிவது போல காட்சி உள்ளது.
நீ படிச்ச school ல நா head master டா .....#DISASTERSarkar #Sarkar #vijay #Rajinikanth pic.twitter.com/yZ4JU66B1i
— makapa (@bharathimk196) November 7, 2018
ஏறத்தாழ சர்கார் திரைப்படத்திலும் இதேபோன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. வள்ளி திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதோடு, வழக்கமான பாணியை தவிர்த்து, நடித்திருந்தார் ரஜினிகாந்த். அப்போது முதல் முறையாக ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி நடத்திவந்தது, நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications