அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. எனது கருத்தை மக்களுக்கு பரப்பியதற்கு மனமார்ந்த நன்றி- ரஜினி
சென்னை: அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என்ற கருத்தை பாமர மக்களுக்கு கொண்டு போய் சேர்த்த ரசிகர்களுக்கு நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு முன்னதாக இரு முறை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் அவர் அரசியல் கட்சியின் பெயரை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. அதாவது சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளதாக ரஜினி தெரிவித்தார். அந்த அரசியல் மாற்றம் குறித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் மாற்றம் இருந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் என்றும் அது இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார். அந்த கருத்தை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அது போல் ரஜினியின் பேச்சு ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளிவந்தது. ரஜினியின் கருத்தை ஒரு சிலர் வரவேற்றுள்ளனர். ஒரு சிலர் இதெல்லாம் ஆகும் காரியமா என கேட்டுள்ளனர்.
தற்போது எங்கு திரும்பினாலும் ரஜினியின் 3 திட்டங்கள் குறித்த பேச்சே இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் அனைத்து தரப்பினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications