வாழ்த்திய மோடிக்கு ரஜினிகாந்த் ஸ்பெஷல் நன்றி! எடப்பாடி முதல் ஸ்டாலின் வரை மற்ற தலைவர்களுக்கும் நன்றி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரசிகர்கள் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரளாக திரண்டு வந்து குவிந்து இருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் ஏற்கனவே பெங்களூரில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்குச் சென்று விட்டதால் இன்று நேரில் யாரையும் சந்திக்க முடியவில்லை.

— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
இந்த நிலையில்தான், இன்று மாலை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும், சக திரை கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் என் பிறந்த நாளை கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Respected dear @narendramodi Ji , thank you very much for your kind wishes 🙏🏻 https://t.co/TFw2MHV4bK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
அதற்கு சில நிமிடங்கள் முன்பு வெளியிட்ட ஒரு ட்வீட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தனியாக நன்றி தெரிவித்துள்ளார். டுவிட்டரில் மோடி, ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள ரஜினிகாந்த், மதிப்புக்குரிய டியர் நரேந்திர மோடி ஜி, உங்கள் அன்பான வாழ்த்துக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications