சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவரே.. இப்படி பேசுவீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கலை.. சப்புன்னு போயிருச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை இன்று ரஜினிகாந்த் சந்தித்த நிலையில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு எதுவுமே பெரிதாக அறிவிக்கப்பவில்லை.

Recommended Video

    கடைசில இப்படி ஆகிடுச்சே தலைவா... சோகத்தில் ரசிகர்கள்

    4ஆவது முறையாக இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களையும் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

    இதனால் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இன்றைய தினம் ரஜினி கட்சியின் பெயர், சின்னம், மாநாடு குறித்த இடம் ஆகியவற்றை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்

    விருப்பம்

    விருப்பம்

    ஆனால் தகவலறிந்த வட்டாரங்களில் கேட்டபோது ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பெரிய அளவிலான அறிவிப்புகளை வெளியிட மாட்டார் என்றே கூறினர். அரசியலுக்கு வருவதாக ரஜினி தனது ரசிகர்கள் முன்னிலையில்தான் கூறினார். அது போல் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும் அவர்கள் முன்னர் வெளியிடுவதைத்தான் ரஜினி விரும்புவார்.

    கிண்டல்

    கிண்டல்

    அதுதான் இத்தனை நாட்கள் ரஜினியை அரசியலுக்கு அழைத்து வரும் ரசிகர்களுக்கு கொடுக்கும் மகிழ்ச்சியான சம்பவமாக இருக்கும். அப்படியெனில் இன்றைய தினம் அவர் எதைப்பற்றி விவாதிப்பார் என்ற கேள்வி எழுந்தது. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என கூறி 2 ஆண்டுகள் ஆன நிலையில் அவரை பெரும்பாலான ஊடகங்கள் எப்போதும் வருவார், எந்த ஆண்டு வருவார் என கேட்டு நச்சரித்து வந்தன. மேலும் சிலர் கிண்டல் கேள்விகளையும் கேட்டு வந்தனர். ஆனால் இன்று எதையும் அவர் அறிவிக்கவில்லை.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    பெரும்பாலான விவாதங்கள் ரஜினியை கிண்டல் செய்யும் விதமாகவே இருந்தன. அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தன்னை பாஜக ஆள் என சொல்வது வேதனை அளிப்பதாக ரஜினி ஏற்கெனவே வேதனை தெரிவித்திருந்தார். எனவே அதுகுறித்த புரிதலையும் அவர் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அவரது பெரும்பாலான அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து ஓரளவு அவர் பேசினார்.

    உப்பு சப்பு இல்லாத விருந்து

    உப்பு சப்பு இல்லாத விருந்து

    ஆனால் வேறு எதுவுமே அவர் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல சொல்லவில்லை. தான் முதல்வர் பதவியை அடைய விரும்பவில்லை என்று கூறி விட்டார். கட்சித் தலைமை வேறு ஆட்சித் தலைமை வேறு என்றும் சொல்லி விட்டார். நானே பதவி ஆசை இல்லாமல் இருக்கிறேன். நீங்களும் அதேபோல இருங்க என்றும் சொல்லி விடடார். இதை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

    ரஜினி

    ரஜினி

    மொத்தத்தில் உப்புச் சப்பில்லாத விருந்தாகவே இது தெரிகிறது. மக்களுக்கு தேவையான பல செய்திகளை அவர் சொன்னார் என்றாலும் கூட ரசிகர்களுக்கு இதில் எந்த அளவுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எப்போதும் அவரை தலைவர் என்றுதான் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் என்று அழைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காது என்பது நிச்சயம் அவர்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும்.

    English summary
    Rajinikanth will not announce any thing big in his press meet, sources say.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X