"அயய்யோ... ரெண்டுமே வேற வேறங்க... ஒப்பிட முடியாதுங்க".. பதறிப் போன ரஜினி.. எதை பற்றி தெரியுமா?

ரஜினிகாந்த் 1995-ன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அயய்யோ... ஆன்மீகம், அரசியல் இரண்டுமே வேற வேறங்க... ஒப்பிடவும் முடியாதுங்க.. ஒப்பிடவும் கூடாது.. ஏன்னா ரெண்டுமே பாம்பு கீரி மாதிரி.. வேறு வேறு துருவம்.. இரண்டுமே சேரவே முடியாது. சேர்க்கவும் கூடாது" என்று ரஜினி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் அதாவது 1995 முதல் ரஜினியின் அரசியல் பற்றின பேச்சுக்கள் எல்லாமே வெகு யதார்த்தமாக இருந்தது.. அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருந்தது.. சுருக்கென 2 வரிகளில் செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த், பதில் சொன்னாலும், அவ்வளவும் அர்த்தம் பொதிந்தே இருக்கும்.

அந்த வகையில், 19995ல் ரஜினி ஒரு டிவிக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில் அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போலவும், அதற்கு ரஜினி பதில் சொல்வது போலவும் இருக்கும்.. "அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன தொடர்பு" என்று கடலூர் ரஜினி பாபு என்ற ரசிகர் கேள்வி கேட்கிறார்.

 ஆன்மீக அரசியல்

ஆன்மீக அரசியல்

அதற்கு ரஜினி அளித்த பதில்: "அயய்யோ இரண்டுமே வேற வேறங்க... ஒப்பிடவும் முடியாதுங்க.. ஒப்பிடவும் கூடாது.. ஏன்னா ரெண்டுமே பாம்பு கீரி மாதிரி.. வேறு வேறு துருவம்.. இரண்டுமே சேரவே முடியாது. சேர்க்கவும் கூடாது" என்று சிரித்து கொண்டே அதேசமயம், உறுதியுடன் பதில் சொல்கிறார்.

வைரல்

வைரல்

கட்சி தொடங்க போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்தே, இந்த 1995-ல் வெளிவந்த வீடியோவைதான் நெட்டிசன்கள் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. காரணம், இப்போது ரஜினி கையில் எடுத்திருப்பது "ஆன்மீக அரசியல்"தான்.. இப்படி ஒரு வித்தியாசமான அரசியலை 3 வருடத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியதே ரஜினிதான்.

 அர்த்தம்

அர்த்தம்

இதற்கு அர்த்தம் இன்றுவரை யாருக்குமே புரியவில்லை.. தனது அரசியல், ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும், ஆன்மீக அரசியல் என்றால், நேர்மையான தர்மமான அரசியல் என்று அர்த்தம் என்றும் ரஜினி விளக்கம் தந்திருந்தார். என்றாலும், ரஜினி கட்சி ஆரம்பிப்பதன் பின்னணியில் பாஜக உள்ளது என்ற வலுவான விமர்சனம் மட்டும் 3 வருடங்களாகவே எழுந்து வருகிறது. ஒருவேளை ரஜினி ஆரம்பிக்க போகும் கட்சியும் பாஜகவின் பினாமி கட்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பி விட்டு வருகிறது..

 சந்தேகம்

சந்தேகம்

திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றும், திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும் ரஜினி தரப்பு சொல்லி கொண்டிருப்பதை பார்த்தாலும், நம் சந்தேகம் எல்லாம் ஊர்ஜிதமாகிவிடுமோ என்ற ஐயமும் உள்ளது. அதேசமயம், ஆன்மீக அரசியல் என்பது திராவிட அரசியலுக்கு எதிரானது என்பதையும் மறுப்பதற்கில்லை.. ஏனென்றால், 2017-ல் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினி பேசியதற்கு, "தமிழகத்தில் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் அரசியலை, ரஜினியின் ஆன்மீக அரசியல் மாற்றும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருந்தார்.

 எச்.ராஜா

எச்.ராஜா

ரஜினியின் ஆன்மீக அரசியல் பாராட்டுக்குரியது, தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான் என்றும், ஆழ்வார்கள் - நாயன்மார்கள் அவதரித்த மண் என்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார்... ஆக, ரஜினி அறிவித்த ஆன்மீக அரசியலை வரவேற்றவர்கள் அத்தனை புள்ளிகளும் பாஜகவில்தான் அதிகம் உள்ளனர்.. 3 1995-லும் ரஜினிக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்தது.. அப்போதும் இமயமலைக்கு சென்று வந்து கொண்டுதான் இருந்தார்.

 விமர்சனம்

விமர்சனம்

ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் துளிகூட சம்மந்தம் இல்லை என்று சொன்னவர், இன்றைய தேதியில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே ரஜினி எது சொன்னாலும் அதை சரியாக கடைப்பிடிப்பதில்லை, மாற்றி மாற்றி தன் கருத்தை மாற்றி கொள்பவர் என்ற விமர்சனம் உள்ள நிலையில், இந்த ஆன்மீக அரசியல் பற்றின விமர்சனமும் உறுதியானதுதானா? இறுதியானதுதானா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.. இனி இவர் செயல்படப் போகும் விதத்தில்தான் அவர் எம்ஜிஆர் ஆவாரா அல்லது சிவாஜி கணேசன் ஆவாரா என்பது அடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+