ஓஹோ.. கட்சி மட்டும் இல்லையாம்.. ஒரே மேடையில் மொத்த வேட்பாளர்களையும் நிறுத்தி .. ரஜினி மெகா பிளான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் தேர்தல் பிளான்களில் ஒன்று தற்போது கசிந்து வருகிறது.. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், அது ரஜினிக்கு பொருத்தமானதாகவே பாரக்கப்படுகிறது.
ரஜினி தன் கட்சியை இந்த ஏப்ரல் மாதமே துவக்க இருப்பதாக சொல்லி இருந்தார்.. ஆனால் தொற்று பாதிப்பு இருக்கவும் அதற்கான முயற்சியை தள்ளி போட்டு வந்தார்.
இதற்கு 2 காரணங்கள் இருந்தன.. ஒன்று தான் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, மக்கள் கண்டிப்பாக கூடுவார்கள்.. அதனால் தொற்று அபாயம் ஏற்படும்.. மற்றொன்று தனக்கே தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதுதான்.

உடல்நிலை
நிறைய ஆபரேஷன்களை ரஜினி செய்திருந்ததாலும், வயது காரணமாகவும், குடும்பத்தாரும், உறவுகளும் ரஜினியின் உடல்நிலையை நினைத்து கவலைப்படுவதாலும் பிரச்சாரம் செய்ய, அவ்வளவாக ஒப்புக் கொள்ளவில்லை.

பிரச்சாரம்
இது சம்பந்தமாக தன்னுடைய நிர்வாகிகளையும் பலமுறை ரஜினி சந்தித்து பேசி உள்ளார்.. அப்போதெல்லாம் மக்களுக்கு தடுப்பூசி வந்தவுடனேயே பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் என்று சொல்லி உள்ளார்.. அப்போது நிர்வாகிகள் மற்றொரு யோசனையை ரஜினிக்கு சொல்லி உள்ளனர்.. "நீங்கள் நேரில் சென்று பிரசாரம் செய்ய தேவையே இல்லை.. வீடியோ கான்பரன்ஸ் மூலமே மக்களை சந்திக்கலாம் என்று சொல்லி உள்ளனர்.. இதற்கு ரஜினி உடனடியாக மறுத்துள்ளார்.. மக்களை சந்திக்காமல் இருக்க கூடாது, நிச்சயம் சந்திப்பேன் என்று சொன்னராம்.

யோசனை
அதற்கு நிர்வாகிகள், அப்படியானால், 5 மண்டலங்களில் ஹெலிகாப்டர் வாயிலாக ஒரு பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று சொல்லி உள்ளனர். அமைதியாக அந்த யோசனையை ரஜினி கேட்டுக் கொண்டதாக சொல்லப்பட்டது. ஆனால், அதைதான் தற்போது நடைமுறைப்படுத்த போகிறாராம் ரஜினி. அதாவது குட்டி விமானத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள போகிறாராம்.. மண்டல வாரியாக, நேரடி பிரசாரம் செய்யவும் திட்டமிட்டிருக்காராம்..

குட்டி விமானம்
எவ்வளவுதான் காரில் சென்றாலும், உடல் நிலைக்கு சரியாக வராது என்பதாலேயே இந்த குட்டி விமானத்தில் பிரச்சாரம் செய்ய முடிவாகி உள்ளதாம்.. ரஜினியின் உறவினர் ஒருவர் இதுக்காகவே சொந்தமா ஒரு விமானம் வாங்க போறாராம்... இந்த விமானத்தில் எட்டு பேர் வரை பயணம் செய்யலாம் என்கிறார்கள்.. ஒரே மேடையில, மாவட்ட வாரியாக வேட்பாளர்களை நிற்க வைத்து, பிரசாரம் செய்யவும் ரஜினி திட்டம் வைத்துள்ளாராம்.

சூப்பர் ஸ்டார்
இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், கிட்டத்தட்ட 45 வருஷத்துக்கும் மேலாக, ரஜினியை நேரில் பார்க்க துடிப்பவர்கள் கோடானுகோடி பேர் காத்து கொண்டிருக்கும்போது, மக்களை சந்திக்காமல் ஓட்டு கேட்பது ரஜினிக்குதான் மைனஸாக அமையும். அதேசமயம் சூப்பர் ஸ்டார் என்ற தமிழக சொத்தின் உடல்நிலையும் நமக்கு முக்கியம் என்பதை மறுக்க முடியாது!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications