சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி ஏன் திடீர்னு அப்படி சொன்னார்.. அவ்வளவு பிரஷர் கொடுத்தது யாரு.. மில்லியன் டாலர் கேள்வி!

ரஜினியின் அந்த அறிவிப்புக்கு என்ன காரணம் என்ற யூகங்கள் கிளம்பி வருகின்றன

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி ஏன் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்? யார் அவருக்கு அழுத்தம் தந்தது? அரசியலில் இருந்து பின்வாங்க என்ன காரணம்? என்ற வாதங்கள் இன்னும் சோஷியல் மீடியாவில் குறையவே இல்லை.

ரஜினி அரசியல் கட்சியை ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பு வந்தாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.

ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் அவரை கட்சிக்கு வரும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும் மறுபக்கம் ரஜினிக்கு என்னாச்சு? அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்ற சந்தேகமும் அடங்கவில்லை. இதுகுறித்து தற்போதும் சில யூகங்கள் வலம்வந்தபடியே உள்ளன.

ரஜினி அரசியலுக்கு வரலை.. என்னத்த ஆலோசிக்கப் போகிறோம்? உற்சாகத்தை தொலைத்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள் ரஜினி அரசியலுக்கு வரலை.. என்னத்த ஆலோசிக்கப் போகிறோம்? உற்சாகத்தை தொலைத்த மு.க. அழகிரி ஆதரவாளர்கள்

 பிரச்சாரம்

பிரச்சாரம்

கட்சி ஆரம்பித்தால் பிரச்சாரத்தில் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டும், அதனால் உடல்நல குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தை ஏற்கனவே ரஜினி, தன்னுடைய மன்ற நிர்வாகிகளிடத்திலேயே சொன்ன விஷயம்தான்.. அப்படி இருந்தும், மறுபடியும் அரசியல் வருகை பற்றி ரஜினி சொல்லி ரசிகர்களை நம்ப வைத்ததுதான் ஏன் என்று தெரியவில்லை என்கிறார்கள் ரஜினியின் தீவிர விசுவாசிகள்.

 பண வசூல்

பண வசூல்

ஆனால், உண்மையிலேயே ரஜினிக்கு 2 பிரச்சனைகள் இருந்திருக்கின்றன.. ஒன்று, ரஜினி வருகையை சொல்லியே தொழிலதிபர்களிடம் நிர்வாகிகள் சிலர் லட்சக்கணக்கில் பேரங்கள் நடத்தி இருக்கிறார்கள்.. அதனால்தான் மக்கள் மன்றம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு திடீரென ஒருநாள் வெளிவந்தது.. பணம் சம்பாதிப்பவர்களுக்கு கட்சியில் இடம் கிடையாது என்று ஏன் வார்னிங் தரப்பட வேண்டும் என்று அப்போது நமக்கும் குழப்பமாக இருந்தது.. இதன் பின்னணியில் ரஜினியின் பெயரை சொல்லி சிலர் வசூலில் இறங்கியதுதானாம்.

 குடும்பத்தினர் கவலை

குடும்பத்தினர் கவலை

மற்றொரு காரணம் உடல்நிலை பிரச்சனைதான்.. ஆஸ்பத்திரியில் அனுமதித்ததுமே அந்த அப்பல்லோ டாக்டர்கள் ரொம்பவே பயமுறுத்திவிட்டுள்ளார்கள் போலும்.. அதனால்தான் குடும்பத்தினர் கலங்கி போய், அரசியலே வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க, ரஜினியும் அதற்கு இணங்க சம்மதித்துள்ளார்.. இந்த விஷயம் தெரிந்துதான், ரஜினி டிஸ்சார்ஜ் ஆன அன்றே போயஸ் வீட்டுக்கு அர்ஜுனமூர்த்தியை பாஜக அனுப்பி வைத்து அழுத்தமும் தரப்பட்டதாக கூறுகிறார்கள்.

 பாஜக அப்செட்

பாஜக அப்செட்

எனினும், உடல்நலம் + அதிருப்தி போன்ற காரணங்களுக்காகவே பாஜகவின் கோரிக்கையையும் ரஜினி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. இதன்பிறகே அந்த பின்வாங்கும் முடிவு வெளியானதாக சொல்லப்படுகிறது.. இப்போதுகூட ரஜினி தன் முடிவை பரிசீலனை செய்யலாமே என்பது ரசிகர் மன்றத்தின் எண்ணம்.. அரசியலுக்கு வராவிட்டாலும் வாய்ஸ் மட்டுமாவது தந்துவிடமாட்டாரா என்பது பாஜகவின் எண்ணம்.. இதில் எது நடக்க போகிறது என்றுதான் தெரியவில்லை!

English summary
Rajinikanths new party statement issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X